அறிவியல் / தொழில்நுட்பம்

கூகுளின் BARD AI 180 நாடுகளில் அறிமுகமானது.

கிரி கணபதி

கூகுள் நிறுவனம் தனது லாங்குவேஜ் மாடலான பார்ட் AI என்ற தொழில்நுட்பத்தை இந்தியா உட்பட 180 நாடுகளில் அறிமுகம் செய்துள்ளது. 

புதிய உலகின் சென்சேஷனாக தற்போது செயற்கை நுண்ணறிவுதான் இருந்து வருகிறது. பல வளர்ந்து வரும் நிறுவனங்களும் தங்களுடைய அன்றாட செயல் பாட்டிற்கு  Ai தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. Ai என்பது மனிதர்கள் போலவே சிந்தித்து செயல்படும் ஓர் தானியங்கிக் கருவியாகும். வங்கிகள், சுகாதாரம், வணிகம் மற்றும் போக்குவரத்துத் துறை என பல இடங்களில் இதை பயன்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. பல தொழில்நுட்ப நிறுவனங்கள் பல கோடி ரூபாயை AI துறையில் முதலீடு செய்து வருகின்றனர். 

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வில் கூகுள் நிறுவனம் அதன் BARD AI லாங்குவேஜ் மாடலுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டது. ஏற்கனவே இது மக்களுடைய பயன் பாட்டிற்கு வெளியிடப்பட்டு, சில தவறுகளின் காரணமாக கூகுள் நிறுவனத்திற்கு 100 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இதில் பல முன்னேற்றங்களைக் கொண்டு வந்து ChatGPT-க்கு போட்டியாக 180 நாடுகளில் இதை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது அந்நிறுவனம். தற்போது ஆங்கிலம் மட்டுமின்றி, கொரியா மற்றும் ஜப்பான் மொழிகளிலும் இது கிடைக்கிறது. விரைவில் உலகம் முழுவதும் உள்ள முக்கிய 40+ மொழிகளில் இது செயல்பட்டு, மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. 

கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட  BARD AI என்பது ஒரு உரையாடல் AI கருவியாகும். இது LaMDA என்பதனால் இயக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தை, கூகுள் அதன் தகவல்களை மனித அறிவின் ஆழத்தோடு இணைப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் துல்லியமான பதில்களை கூகுளில் ஒருவர் பெற முடியும் என கூறுகின்றனர். 

நேரடியாக புதிய தரவுகளை யார் வேண்டுமானாலும் அப்லோட் செய்யும் வகையில் புதிய அம்சம் இதில் கொண்டுவரப்பட்டுள்ளது. கூகுள் மேப்ஸ், கூகுள் லென்ஸ் போன்ற கூகுள் கருவிகளின் ஆதரவுகளை BARD AI-ஆல் பெற முடியும். இதனால் பயனர்களுக்கு எல்லா தளங்களிலும் இது பயனுள்ள வகையில் இருக்கும் என நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

முற்றிலும் புதிய வழிகளில் பயனர்களின் கற்பனை மற்றும் படைப்பாற்றலை அதிகரிக்க பார்ட் ஏஐ  உதவும் என எதிர்பார்க்கலாம்.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT