Best tips to make your vehicle tires last longer.
Best tips to make your vehicle tires last longer. 
அறிவியல் / தொழில்நுட்பம்

வாகனத்தின் டயர் நீண்ட காலம் உழைக்க பெஸ்ட் டிப்ஸ்!

கிரி கணபதி

ங்களுடைய கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்களின் டயர் அடிக்கடி தேய்ந்து போகிறதா? அதை அவ்வப்போது மாற்ற வேண்டிய சூழல் உங்களுக்கு ஏற்படுகிறதா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்காக தான். டயர்களின் ஆயுட்காலம் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் காணலாம். 

பொதுவாகவே நாம் வாகனம் வாங்கும் போது, அது எத்தனை சிசி, எவ்வளவு டார்க், பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கிறது என்று தான் பார்ப்போம். ஆனால் அது என்னதான் அது நவீன வாகனமாக இருந்தாலும், டயர் சரியாக இருந்தால் மட்டுமே அதற்கான ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தும். சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமாக, வாகன டயர்களின் ஆயுட்காலத்தை நம்மால் அதிகரிக்க முடியும்.

தரமான டயர் வாங்குங்கள்: எந்த வாகனமாக இருந்தாலும் அவற்றின் டயர்கள் தரமானதாக இருக்க வேண்டும். நல்ல தரமான டயர்களின் செலவு அதிகம்தான் என்றாலும், அதனால் ஏற்படும் நன்மைகள் பல. தரமான டயர்கள் என்றுமே நீடித்து உழைக்கும்.  எனவே அதிகம் செலவானாலும் பரவாயில்லை என்று, தரமான டயர்களைத் தேர்வுசெய்வது நல்லது. 

குறிப்பிட்ட வேகத்தில் வாகனத்தை செலுத்துங்கள்: அதிக சிசி கொண்ட பைக்தானே என்று எப்போதும் வேகமாக ஓட்ட வேண்டாம். ஏனெனில் வாகனத்தை வேகமாக ஓட்டும்போது டயர்களின் வெப்பம் அதிகமாகும். இதனால் டயரின் தேய்மான அளவு அதிகரித்து அதன் ஆயுளை குறைக்க வாய்ப்புள்ளது. எனவே முறையான வேக வரம்புகளைப் பின்பற்றுவது நல்லது. 

சரியான காற்றழுத்தம் முக்கியம்: நீங்கள் இறுதியாக உங்கள் வானகத்திற்கு எப்போது காற்று நிரப்பினீர்கள். உடனே சென்று உங்கள் வாகன டயர்களின் காற்றழுத்தத்தை சோதனை செய்யுங்கள். எப்போதுமே ஒரு டயரில் எவ்வளவு காற்று இருக்க வேண்டும் என அதன் உற்பத்தி நிறுவனமே பரிந்துரை செய்திருக்கும். அந்த அளவில் காற்று நிரப்பினால் மட்டுமே டயரின் ஆயுட்காலம் நீண்ட நாளுக்கு வரும். பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் இலவசமாகவே காற்று நிரப்பித் தருவார்கள். எரிபொருள் நிரப்பும்போது ஒரு ஐந்து நிமிடம் செலவிட்டு இலவசமாகவே டயருக்கு காற்று நிரப்பிக் கொள்ளுங்களேன். 

கரடு முரடான சாலைகளைத் தவிர்க்கவும்: கரடு முரடான சாலைகள் டயர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும். எனவே வாகனம் ஓட்டும்போது எதிரே பள்ளம் வந்தாலும் வேகத்தை குறைத்து மெதுவாக பள்ளத்தில் விடுங்கள். பெரும்பாலும் பள்ளங்கள் நிறைந்த சாலைகளை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். அதாவது கொஞ்ச தூரம் சுற்றி சென்றாலும் பரவாயில்லை, நல்ல பாதையில் செல்வது நல்லது. 

அதிக எடை வேண்டாம்: வாகனத்தில் அதிகமாக எடை ஏற்றினால் அது உங்கள் டயருக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் டயர்கள் வேகமாக தேய்ந்து விடும். எனவே உற்பத்தி நிறுவனம் பரிந்துரை செய்த எடைக்கு அதிகமாக வாகனத்திற்கு சுமையைக் கொடுக்க வேண்டாம்.

இந்தப் பதிவில் கூறிய அனைத்துமே பின்பற்றுவதற்கு எளிமையான ஒன்றுதான். இந்த வழிமுறைகள் அனைத்தையும் நீங்கள் தவறாமல் பின்பற்றினால், உங்கள் டயர்களின் ஆயுட்காலம் கட்டாயம் உயரும். எனவே அடிக்கடி டயர்களை மாற்ற செலவு செய்வதும் குறையும்.

பெண்களே! உங்கள் முகத்திற்கு ஏற்ற பொட்டு எது?

5 Cool experiments for young science lovers!

உண்டியலின்றி உயர்ந்து நிற்கும் பாலாஜி!

கவிதை - மாற்றம் வேண்டும்!

60 + வயது... அழகு நிலையம் செல்வது எதற்கு?

SCROLL FOR NEXT