சில மாதங்களுக்கு முன்பு ஒரு நிமிடம் வரை வாய்ஸ் ஸ்டேட்டஸ் வைக்கும் அம்சத்தை அறிமுகம் செய்த WhatsApp நிறுவனம், இப்போது புதிதாக Imagine எனும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம் பற்றிய முழு விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.
அதாவது இமேஜின் என்பது வாட்ஸ் அப்பில் புதிதாக சேர்க்கப்பட உள்ள அம்சமாகும். இதைப் பயன்படுத்தி பயனர்கள் தங்களது விருப்பம் போல புகைப்படங்களை உருவாக்கலாம். மெட்டா நிறுவனத்தின் லாங்குவேஜ் மாடலை அடிப்படையாகக் கொண்ட இந்த அம்சமானது, பயனர்கள் தங்கள் விருப்பம் போல புகைப்படங்களை தயாரித்து பிறருடன் பகிர்ந்து மகிழ அனுமதிக்கிறது. WABetainfo-வின் சமீபத்திய அறிகையின்படி புதிய ஆண்ட்ராய்டு வெர்ஷன்களில் இந்த அம்சமானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த இமேஜின் அம்சத்தைப் பயன்படுத்தி whatsapp பயனர்கள் whatsappலயே இனி எளிதாக புகைப்படங்களை உருவாக்கிக் கொள்ளலாம். வாட்ஸ் அப்பில் அட்டாச்மெண்ட் ஆப்ஷனுக்கு கீழ் இந்த அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தை பெற்ற சில பயனர்கள், அட்டாச்மெண்டில் உள்ள இமேஜினை கிளிக் செய்து செயற்கை நுண்ணறிவு ஜெனரேட்டட் படங்களை உருவாக்கலாம்.
ஏற்கனவே MetaAI அம்சத்தைக் கொண்டுள்ள whatsapp பயனர்களுக்கு மட்டுமே இந்த Imagine அம்சம் தற்போது வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மெட்டா எஐ சேட்பாட் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, கனடா மற்றும் வேறு சில இடங்களில் மட்டுமே தற்போது கிடைக்கிறது. இதற்கு முன்னதாக வாட்ஸ் அப்பில் தானாக AI ப்ரொபைல் பிக்சரை உருவாக்கும் அம்சம் வெளியானது. ஆனால் இப்போது நாம் விரும்பும் புகைப்படத்தை இந்த இமேஜின் அம்சத்தைப் பயன்படுத்தி உருவாக்கிக் கொள்ளலாம்.
அதேபோல இதற்கு முன்பாக வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் இல் வெறும் 30 வினாடிகள் மட்டுமே வாய்ஸ் ஸ்டேட்டஸ் வைக்க முடியும். ஆனால் இப்போது மேலும் 30 வினாடிகள் நீட்டித்து அதை ஒரு நிமிடமாக அப்டேட் செய்துள்ளனர். இனி உங்களது வாய்ஸை ஸ்டேட்டஸாக வைக்க மைக்ரோபோனை லாங் பிரஸ் செய்து ஒரு நிமிடம் வரை பேசி ஷேர் செய்ய முடியும். இது தற்போது எல்லா பயனர்களுக்கும் அணுகக் கிடைக்கிறது. இதைத்தொடர்ந்து இமேஜின் அம்சமும் விரைவில் எல்லா பயனர்களும் பயன்படுத்தும் வகையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.