இறுதியில் ஒரு வழியாக அனைவரும் எதிர்பார்த்த iphone 15 மாடலின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த நிகழ்வு வருகிற செப்டம்பர் 12ஆம் தேதி குப்பர்டினோவில் அமைந்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைபெறும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வழங்கப்பட்ட அழைப்பிதழில், ஆப்பிள் நிறுவனத்தின் லோகோ தங்கம் மற்றும் நீல நிறத்தில், கூடவே Wonderlust என எழுதப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் எது போன்ற தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்படும் என்ற விவரங்களை ஆப்பிள் நிறுவனம் வெளிப்படையாகக் கூறவில்லை. இருப்பினும் இந்த தேதியில் iphone 15 மாடல் கட்டாயம் அறிமுகம் செய்யப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இந்த நிகழ்வு சரியாக இந்திய நேரப்படி செப்டம்பர் 12ம் தேதி இரவு 10:30 மணிக்கு தொடங்குகிறது. iphone 15 மாடல் சீரிஸில் மொத்தம் இரண்டு ஸ்டாண்டர்ட் வகை மற்றும் இரண்டு ஹைஎண்ட் வகை மாடல்கள் உட்பட மொத்தம் 4 புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக பலரால் எதிர்பார்க்கப்படும் மாடல் எதுவென்றால், iphone 15 Pro Max என்ற ஒரு வகை உயர்தர மாடல்தான். ஏனென்றால் இதில் 10X ஆப்டிகல் ஜூம் கேமரா மற்றும் ரவுண்ட் எடஜ் டைட்டானியம் கேஸிங் டிசைன் உடன் உருவாக்கப்பட்டுள்ளது.
iphone 15-ன் விலை என்னவாக இருக்கும்?
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இதுவரை வந்த iphone மாடல்களில், iphone 15 சீரிஸ் தான் விலையுர்ந்த போன் வகையாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம். குறிப்பாக iphone 15 மற்றும் iphone 15 Pro Max விலை இதற்கு முன்னர் வந்த ஃபோன்களின் விலையை விட அதிகமாக இருக்கலாம். அதாவது iphone 15 ஸ்டாண்டர்ட் மாடல் ரூ.79,900 என்கிற விலையிலும், அதன் Pro மாடல் ரூ.1,49,990 என்று விலை நிர்ணயம் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த ஐபோனுடன் சேர்த்து, ஆப்பிள் நிறுவனம் தனது புதிய Apple Watch மாடலையும் அறிமுகம் செய்யவிருக்கிறது. இப்போதைக்கு இந்தத் தகவல்கள் தான் வெளிவந்துள்ளது. செப்டம்பர் 12ஆம் தேதி உண்மையில் அந்த நிகழ்வில் எதுபோன்ற சாதனங்கள் வெளிவரும் என்பது முழுமையாகத் தெரியும்.