Mahindra XUV 3XO 
அறிவியல் / தொழில்நுட்பம்

மஹிந்திராவின் புதிய XUV 3XO வாங்குற ஐடியா இருக்கா? வாங்கும் முன் இத படிங்க!

A.N.ராகுல்

மஹிந்திரா கார்கள் என்றாலே எல்லோரும் விரும்பி வாங்கக்கூடிய SUV ரக கார் பிராண்ட்களில் ஒன்று. காரணம் அவர்கள் கொடுக்க கூடிய உலகத்தரம் வாய்ந்த தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களே. இதில் XUV 3OO கார் மஹிந்திராவின் SUV ரக lineup இல் தொடக்க மாடலாக இருந்தது. அதை இப்போது XUV 3XO என்று புதிய facelift ஆக வருகிற ஏப்ரல் 29 தேதியில் launch செய்கிறார்கள். இதில் என்ன என்ன சிறப்பம்சங்கள் இருக்கலாம் என்பதை பார்ப்போம்.

XUV 3XO சிறப்பம்சங்கள்:

  • மஹிந்திரா வெளியிட்ட இந்த காரின் டீசரை வைத்து பார்க்கும் போது இதன் உட்புறம் முற்றிலும் தங்களுடைய இன்னொரு மாடலான XUV 4OO காரை போல இருக்கலாம்.

  • 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், 10.25 இன்ச் infotainment screen மற்றும் அதனோடு வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் play வசதிகள் வந்துவிடும்.

  • இந்த செக்மென்ட்டில் தங்களுடைய போட்டியாளர்களின் கார்களில் இருப்பது போல் வென்டிலேட்டட் சீட்ஸ், 360 டிகிரி கேமெராக்கள் ஆகியவை கண்டிப்பாக வந்துவிடும்.

  • இதில் சிறப்பம்சமாக இந்த செக்மென்ட்டில் இல்லாத பனோராமிக் sunroof இருக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு இந்த காரை கண்டிப்பாக பிடிக்கும்.

  • கூடுதலாக இதில் Harman Kardon ஸ்பீக்கர்களை பயன்படுத்துகிறார்கள் இதனால் தரமான மியூசிக் கேக்க விரும்புவர்களுக்கு இந்த கார் சரியான சாய்ஸ் ஆக அமையும்.

  • இன்னொரு அம்சமாக இதில் ADAS டெக்னாலஜி பயன்படுத்துகிறார்கள் இது பாதுகாப்பு விஷயத்தில் இன்னும் வலுசேர்க்கும்.

  • வெளிப்புற டிசைன் பொறுத்தவரை நிறைய மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம் குறிப்பாக இதன் முன்புற மற்றும் பின்புற தோற்றம் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

  • முன்னர் இருந்த halogen headlight செட்டப்பை மாற்றி LED ப்ரோஜெக்டர் செட்டப்பை கொடுத்திருக்கிறார்கள்.

  • பின்புறமும் halogen யை நீக்கிவிட்டு full connected LED tail lamp இல் வருகிறது.

  • காரின் நீளம், அகலம் மற்றும் உயரம் பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. கார் வெளிவந்தவுடன் தான் அதைப் பற்றி நமக்கு தெரியவரும்.

  • முக்கியமாக இதனுடைய டெஸ்டிங்கை கடந்த ஒரு வருடமாக நம் இந்திய சாலைகளில் ஓட்டி பார்த்திருக்கிறார்கள். ஆகையால் இதனுடைய chassis மற்றும் transmission இல் நிறைய மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம்.

  • முன் மாடலில் இருந்தது போல் பெட்ரோல், டீசல் என இரு வேரியண்ட்களில் இது கிடைக்கும்.

ஆகையால் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் இந்த கார் வரப்போகிறது. இந்த செக்மென்ட்டின் போட்டியாளர்களான கியா sonet , hyundai venue , மாருதி breeza மற்றும் டாடா nexon ஆகியவற்றின் facelift கள் ஏற்கனவே நம் இந்திய சந்தைகளில் இருக்கிறது. அதிலிருந்து எவ்வாறு இந்த XUV 3XO தனித்திருக்கிறது என்பது 29 ஆம் தேதி தான் தெரியவரும்.

மஹிந்திரா பொறுத்தவரை டாடா வை போலவே நம் இந்தியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம். சமீபகாலங்களில் அவர்களிடமிருந்து வெளிவந்த கார்கள் பெற்ற வரவேற்பை போல் இந்த XUV 3XO கணிடிப்பாக பெறும் என நம்புவோம்.

புருவ அழகு பராமரிப்புக்கான 5 குறிப்புகள்!

இலங்கையின் பிரதமரானார் ஹரிணி அமரசூரிய... யார் இந்த ஹரிணி அமரசூரிய?

55 வது இந்திய சர்வதேச திரைப்பட விழா - ஏராளமான தமிழ் திரைப்பட கலைஞர்கள் பங்கேற்பு!

நயன்தாரா - கல்யாண வீடியோவும் பத்து கோடி ரூபாய் வழக்கும்!

"என் பெயரை அவர் எடுத்துகிட்டார்": யார் பெயரை யார் எடுத்தது?

SCROLL FOR NEXT