அறிவியல் / தொழில்நுட்பம்

இனி ஒரே Whatsapp கணக்கு. பல சாதனங்களிலும் பயன்படுத்தலாம். எப்படித் தெரியுமா?

கிரி கணபதி

வாட்ஸ் அப் பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் விதமாக, அட்டகாசமான அப்டேட் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருவருடைய வாட்ஸ் அப் கணக்கை ஒரே நேரத்தில் இனி 4 சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்த முடியும். 

Whatsapp இயங்குதளம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். தற்போதுவரை வாட்ஸ் அப் சேவையானது மக்கள் மத்தியில் பிரபலமாகவும் பாதுகாப்பாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிலர் இதை தங்களின் கணினி மற்றும் லேப்டாப்களில் சிங்க் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். 

சமீபத்தில் விண்டோஸ் இயங்குதலத்திற்காகவே புதிய வாட்ஸ் அப் செயலியை மெட்டா நிறுவனம் அறிமுகப் படுத்தியது. இது பார்ப்பதற்கு ஸ்மார்ட் போனில் பயன்படுத்தும் செயலி போலவே இருக்கிறது. ஒரு அக்கவுண்ட்டை பல சாதனங்களில் பயன்படுத்தும் போது வேகம் மற்றும் தடையற்ற வகையில் செயல்படும்படி இது உருவாக்கப்பட்டுள்ளது. 

இதை பயன்படுத்தி whatsapp பயனர்கள் தங்கள் கணக்கை நான்கு சாதனங்கள் வரை இணைக்க முடியும். பயனர்களின் உரையாடல்கள் அனைத்திலும் சிங்க் செய்யப்பட்டு, என்கிரிப்ட் செய்யப்பட்டு பாதுகாப்பாக இருக்கும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், வாட்ஸ் அப்பை ஒரு மொபைல் போனில் பயன்படுத்திக் கொண்டிருந்தாலும், அதே சமயத்தில் மற்ற சாதனங்களிலும் இனி பயன்படுத்த முடியும். 

இதை செயல்படுத்துவதற்கு, விண்டோஸ் டெஸ்க்டாப்பில் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்தால் போதும், அனைத்து சாதனங்களுடன் இணைப்பது சார்ந்த புதிய அம்சத்தை நீங்கள் பெற முடியும். 

ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில் எப்படி இணைக்கலாம்?

முதன் முதலில் நீங்கள் எந்த சாதனத்தில் வாட்ஸ் அப்பைத் தொடங்கினார்களோ அதில் Settings பக்கத்திற்கு செல்லவும்.

 அந்த பக்கத்தில் Linked Device என்பதை தேர்ந்தெடுத்து Link a New Device என்பதை கிளிக் செய்யவும். 

பின்னர் உங்களுடைய இரண்டாவது சாதனத்தை இணைக்க, விண்டோஸ் டெஸ்க்டாப் பிரவுசரில், whatsapp web இணையதளத்தை திறக்கவும். அதில் காட்டப்படும் QR குறியீட்டை நீங்கள் இணைக்க விரும்பும் இரண்டாவது சாதனம் மூலமாக ஸ்கேன் செய்தால், அது தானாக இணைந்து விடும். தற்போது நீங்கள் இரண்டு ஸ்மார்ட் போனிலும் ஒரே whatsapp கணக்கை பயன்படுத்தலாம். மேலும் மற்றொரு சாதனத்தை இணைக்கவும் இதே செயல்முறையைப் பயன்படுத்தலாம். 

நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு சாதனத்திலும் உங்களை தனிப்பட்ட தகவல்கள், மெசேஜ்கள், வீடியோ ஆடியோ கால்கள் அனைத்தும் End to End Encrypt செய்யப்படும். ஒவ்வொரு சாதனத்தையும் தனித்தனி வாட்ஸ் அப் போல நீங்கள் பயன்படுத்தலாம் என நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதில் சொல்லப்படாத ஒரு பிரச்சனை என்னவென்றால், உங்களுடைய கணக்கு இணைக்கப்பட்ட ஸ்மார்ட் போன் உங்கள் கையில் இருக்கும் வரை தான் இது பாதுகாப் பானது. எல்லா சமயங்களிலும் இணைக்கப்பட்ட எல்லா சாதனங்களையும் நாம் கையில் வைத்திருப்பதில்லை. ஒரு ஸ்மார்ட் போனை கையில் வைத்துக் கொண்டு பாதுகாக்கவே கஷ்டமாக இருக்கிறது. இதில், நான்கு சாதனங்களில் ஒரு அக்கவுண்டைப் பயன்படுத்தினால் எப்படி இருக்கும், எப்படி பாதுகாப்பது என யோசித்துப்பாருங்கள்.  

இது எந்த அளவுக்கு நல்ல அப்டேட்டாக இருக்கும் எனத் தெரியவில்லை. நீங்கள் பிரைவேட் சாட் எதுவும் செய்யாத நபராக இருந்தால், நான்கு சாதனங்களில் என்ன, எதிர்காலத்தில் பத்து சாதனங்களில் கூட பயன் படுத்தலாம் என்ற நிலை வருமோ?

நிதானமாக இருப்பதால் கிடைக்கும் லாபம் என்ன தெரியுமா?

NISAR - இஸ்ரோ - நாசா கூட்டு முயற்சியில் பேரிடர் கண்காணிப்பு செயற்கைக்கோள்!

துணிந்தாருக்கு துக்கம் இல்லை!

இயற்கையிடம் சுறுசுறுப்பை கற்றுக் கொள்ளுங்கள்!

தலைக்கு ஷாம்பு பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க!

SCROLL FOR NEXT