iPhone 15 Pro 
அறிவியல் / தொழில்நுட்பம்

இதனால்தான் ஐபோன் 15 ப்ரோ சூடாகுது! ஆப்பிள் கொடுத்த விளக்கம்!

கிரி கணபதி

பலரது அதீத எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி உலகம் முழுவதும் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 15 மாடல் அறிமுகமானது. இந்நிலையில் தற்போது இந்த போனை பயன்படுத்தும்போது அதிகம் சூடாவதாக இதை வாங்கியவர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக iphone 15 pro சீரிஸ் அதிகம் சூடாவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. 

இப்படி ஒரு பிரச்சனை iphone 15ல் இருப்பது உண்மைதான் என ஆப்பிள் நிறுவனமும் ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் இதற்கான காரணம் என்னவென்பதையும் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதிய ஐபோன் 15 ப்ரோ வழக்கத்தை விட அதிகம் சூடாவதற்கான காரணங்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். போன் வாங்கிய புதிதில் சில நாட்களுக்கு அது ரீஸ்டார்ட் ஆகும்போது சூடாவது தெரிய வந்துள்ளது. ரீஸ்டார்ட் ஆகும்போது பேக்ரவுண்டில் சில செயலிகள் இயங்குவதே இதற்குக் காரணமாகும். மேலும் புதிய iOS 17-லும் சில பிரச்சினைகள் இருப்பதால், சாதனம் சூடாவது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. அடுத்தடுத்த புதிய சாப்ட்வேர் அப்டேட் செய்கையில் இந்தப் பிரச்சனை சரியாகிவிடும். அதேபோல மற்ற நிறுவனங்களின் செயலிகள் ஐபோன் சிஸ்டத்தை பாதிப்பதாகவும் எங்களுக்கு புகார் வந்துள்ளது. எங்களுடைய ஆப் டெவலப்பர்களோடு இணைந்து இதை சரி செய்வதற்கான முயற்சியில் நாங்கள் தற்போது ஈடுபட்டு வருகிறோம்" என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேலும் ஐபோன் 15ல் டைட்டானியம் பொருளை பயன்படுத்தியதால் அதிகமாக சூடாகிறது என்ற குற்றச்சாட்டை ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் மறுத்துள்ளது. சில குறிப்பிட்ட நிறுவனங்களைச் சேர்ந்த அப்களை பயன்படுத்தும்போது ஐபோன் சாதனத்தின் CPU ஓவர்லோட் ஆவதாலும் கொஞ்சம் அதிகமாக சூடாகிறது. வரவுள்ள புதிய ஓஎஸ் அப்டேட்டில் இந்தப் பிரச்சனைகள் சரி செய்யப்படும். இதனால் சாதனத்தின் பர்ஃபார்மன்ஸில் எந்த மாற்றமும் இருக்காது என ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. 

என்னை துறந்து சென்றவனும் என்னால் துறக்கப்பட்டவனும்!

இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் சமையல் எண்ணெய்கள்!

இந்த ரகசியம் மட்டும் தெரிஞ்சா இனி குளிர்ந்த நீரில்தான் குளிப்பீங்க! 

கார்த்திகை மாதத்தில் வீட்டு வாசலில் இரண்டு விளக்கு ஏற்றுவது ஏன் தெரியுமா?

இளம் வயதினரைத் தாக்கும் புற்று நோய்கள் என்னென்ன தெரியுமா? 

SCROLL FOR NEXT