HIMALAYA  
அறிவியல் / தொழில்நுட்பம்

விண்வெளி வீரர் வெளியிட்ட இமயமலை படம்: இணையத்தில் வைரல்!

எல்.ரேணுகாதேவி

விண்வெளி நிலையத்தில் இருந்து ஐக்கிய அமீரகத்தைச் சேர்ந்த விண்வெளி வீரரான சுல்தான் அல் நையாதி வெளியிட்ட  இமயமலையின் பிரம்மிப்பூட்டும் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சார்ந்த விண்வெளி வீரர்களில் ஒருவரான சுல்தான் அல் நையாதி, தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றிவருகிறார். ஆறு மாத காலத்திற்கு விண்வெளி பயணத்தை திட்டமிட்டு அவர் விண்வெளியில் இருந்து வருகிறார். பொதுவாக விண்வெளி வீரர்கள் அவ்வபோது விண்வெளி , பூமியின் நிலப்பரப்பு உள்ளிட்ட படங்களை வெளியிடுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 12ம் தேதி விண்வெளியில் இருந்து இமயமலையின் பனி மூடிய அழகிய காட்சியை படம் பிடித்து அதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படங்கள் இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்று தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

United Arab Emirates (UAE) astronaut Sultan Al Neyadi

“விண்வெளியில் இருந்து இமயமலையின் தோற்றம் இது. கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான இடமான எவரெஸ்ட் சிகரத்தின் தாயகம்தான் இமயமலை. நமது கிரகத்தில் இந்த மலைகள் இயற்கையின் அடையாளங்களில் ஒன்றாக காட்சியளிக்கிறது” என விண்வெளி வீரர் சுல்தான் அல் நையாதி குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த ஜூன் 15ம் தேதி வட மாநிலங்கள் முழுக்க பிபர்ஜாய் புயல் கொடூர தாண்டவமாடிய நிலையில் சுல்தான் அல் நையாதி விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட பிபர்ஜாய் புயல் தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சுல்தான் அல் நையாதி தற்போது எடுத்துள்ள இமயமலையின் பிரம்மிப்பூட்டும் படங்கள் பலராலும் பாராட்டைப் பெற்று வருகின்றன.

தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

SCROLL FOR NEXT