அறிவியல் / தொழில்நுட்பம்

CYBER கிரிமினல்களும் ESCROW தரகர்களும் இவர்கள் யார்?

கிரி கணபதி

2020 முதல் 2022 வரை டார்க்நெட்டில் Escrow சேவைகளை வழங்கும் சைபர் கிரிமினல்கள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மெசேஜ்களை அனுப்பியுள்ளதாக, சமீபத்திய Kaspersky நிறுவனம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

Escrow Agents என்பவர்கள், சைபர் குற்றவாளிகளுக்கு ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்காக செயல்படும் மூன்றாம் தரப்பு இடைத்தரகர்கள். இவர்கள் பிறருடைய தரவுகள், சேவைகளை விற்க அல்லது வாங்க விரும்பும் சைபர் கிரிமின்களுடன் கூட்டாக செயல்படுகின்றனர். இவர்களுக்கு பொதுவாகவே சைபர் கிரிமினல்கள் சம்பாதிக்கும் பணத்தில், 15 சதவீதம் வரை கொடுக்கப்படுகிறது. டார்க் நெட்டில் இத்தகைய வணிகம் எப்படி செய்யப்படுகிறது என்பதை Kaspersky Digital Footprint Intelligence குழுவினுடைய அறிக்கையில் துல்லியமாக விவரிக்கப்பட்டுள்ளது. 

டார்க்வெப்பில் செயல்படும் சைபர் கிரிமினல்கள் தங்கள் சொந்த பாதுகாப்பைப் பற்றி அதிகமாக கவலைப்படுகிறார்கள். மேலும் தங்களைப் போலவே இருக்கும் மற்ற சைபர் கிரிமினல்களும் இதற்கு பலியாவதை அவர்கள் விரும்பவில்லை. பிறருடைய தரவுகள், கணக்குகள், கிரெடிட் கார்டு டீடெயில்கள் போன்றவற்றை வாங்கி, பரிவர்த்தனையை முடிக்கும்போது Escrow முகவர்களின் சேவைகளை இவர்கள் பயன்படுத்துகிறார்கள். இது ஒரு மனிதனாகவோ அல்லது தானியங்கி அமைப்பாகவோ இருக்கலாம். இது பரிவர்த்தனங்களை எளிமையாகவும் பாதுகாப்பாகவும் மேற்கொள்ள வழிவகுக்கிறது. மேலும் சில வழக்கத்திற்கு மாறான செயல்களுக்கும், விலை உயர்ந்த பரிவர்த்தனைகளுக்கும் இன்றளவும் மனித இடைத்தரர்களின் தேவை இவர்களுக்கு இருக்க செய்கிறது. 

Kaspersky Digital Footprint Intelligence குழு, பிறருடைய தரவுகள் இணையத்தில் விற்கப்படுவது, குற்றவியல் விவாதங்கள்,  மேலும் பல டார்க் வெப்பில் நடக்கும் விஷயங்களைக் கண்காணிக்க உதவுகிறது. கடந்த 2020 முதல் டிசம்பர் 2022 வரை மிடில்மேன், இடைத்தரகர்கள், Escrow ஏஜென்ட் போன்ற சொற்களை இணையத்தில் தேடுவது ஒரு மில்லியனுக்கும் அதிகமாக இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த செய்தியானது டார்கெட் தொடர்பான செய்திகளின் எண்ணிக்கையில் மொத்தம் 14 சதவீதம் ஆகும்.  

Kaspersky-ன் ஆசிய பசிபிக் நிர்வாக இயக்குனர் இது பற்றி கூறுகையில், "சைபர் குற்றவாளிகள் தங்களுடைய பாதுகாப்பில் தற்போது அதிநவீனமாக மாறிவிட்டார்கள். மேலும் சைபர் குற்றங்கள் ஆசிய பசிபிக் பகுதிகளில் அதிகரித்து வருவது கவலையாக இருக்கிறது. இனி வணிகங்கள் தங்கள் சொத்துக்களை பாதுகாப்பதில் விழிப்புடன் செயல்பட வேண்டும். புகழ்பெற்ற சைபர் செக்யூரிட்டி நிறுவனங்களுடன் கூட்டு சேர்வது மூலம், டார்க்வெப் செயல்பாட்டை கண்காணித்து, ஆசிய பசிபிக் வணிகங்கள் தங்கள் சொத்துக்களை பாதுகாத்து இணைய தாக்குதல்களின் அபாயத்தைக் குறைக்கலாம்" என்று கூறியுள்ளார். 

டார்க்வெப் குற்றங்களை கண்டுபிடிப்பதற்கும் தடுப்பதற்கும் கடினமாக இருப்பதால், இணைய செயல்பாடுகளில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். சைபர் குற்றங்களை எதிர்த்துப் போராட முதலில் அது எப்படி வேலை செய்கிறது என்பதை நாம் அறிய வேண்டும். பலவிதமான சைபர் குற்றங்கள் பற்றி நீங்கள் இணையத்தில் தேடினாலே தெரிந்து கொள்ளலாம். இது சார்ந்த உண்மைகளை அறிந்துகொண்டு, இணையத்தில் பாதுகாப்பாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள். 

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT