ஆளில்லாமல் இயங்கும் புதிய Self-Balancing பைக்கை யமஹா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
தொழில்நுட்பங்களை மனிதர்கள் இயக்கியது சென்று, தற்போது மனிதர்களை தொழில் நுட்பங்கள் இயக்கத் தொடங்கி இருக்கின்றன. அதற்கான சான்று இன்னும் சில வருடங்களில் வெளிப்பட தொடங்கிவிடும். இப்படி பல்வேறு வகையான விசித்திரமான கண்டுபிடிப்புகள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பட்டியலில் தற்போது யமஹா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஆளில்லாமல் இயங்கும் விசித்திர பைக் இடம்பெற்றுள்ளது.
2023 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் இந்த பைக்கை யமஹா நிறுவனம் வெளிப்படுத்தி இருக்கிறது. இந்த பைக்குக்கு 'Motoroid 2' என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த பைக் தானாக இயங்கக் கூடியது. மேலும் தனது உரிமையாளரை அடையாளம் காணும் சென்சார் அந்த பைக்கில் பொருத்தப்பட்டிருக்கிறது. உரையாடல்கள் மூலமாக இந்த பைக்கை இயக்க முடியும்.
அதன் பின்புற சக்கரம் தானாகவும், திசை மாறிய கோணத்திலும் இயங்கக் கூடியது. பைக்கின் ஸ்டாண்டுகளும் தானாகவே செயல்படக்கூடியவை. இது மட்டுமல்லாமல் செல்லும் இடத்திற்கான மேப்பை வாகனத்தில் பதிவு செய்தால் செல்லக்கூடிய இடத்திற்கு சரியாக சொல்லும் வகையில் இந்த Motoroid 2 உருவாக்கப்பட்டிருப்பதாக யமஹா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
இந்த Motoroid 2 வருங்காலத்திற்கான கண்டுபிடிப்பு என்றும், 2030 களுக்குப் பிறகு உலகின் பெரும் பகுதிகளில் Motoroid 2 இயக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. அதே சமயம் பல்வேறு நாடுகளில் உள்ள வாகனச் சட்டங்கள் மோட்டாய்ட் டு இயங்க அனுமதி வழங்குமா என்பது சந்தேகமே.