ஸ்பெஷல்

10 நாட்கள் சொர்க்க வாசல் திறப்பு: திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசனம்!

கல்கி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில்வை குண்ட ஏகாதசியை முன்னிட்டு தொடர்ந்து 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

நாட்டில் அனைத்து பெருமாள்கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல்திறப்பு நடைபெறும். அதில் பங்கேற்றால் அனைத்து பாவங்களும் நீங்கி வைகுண்டம் அடையலாம் என்பது ஐதீகம். அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் வைகுண்ட ஏகாதசி சிறப்பாகக் கொண்டாடப்படும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சொர்க்க வாசல் திறப்பு குறித்து திருமலையில் தேவஸ்தானத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பின்னர் அநத ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்ததாவது::

திருப்பதி ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பது குறித்து மடாதிபதிகள் மற்றும் பீடாதிபதிகளிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. அதன்படி டிசம்பர் 25 முதல் ஜனவரி 3-ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்படும்.

-இவ்வாறு திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ஒன்பது வாசல் கடந்து மூலவரை தரிசிக்கும் கோயில் எங்குள்ளது தெரியுமா?

சூரியகாந்தி விதையின் வியக்க வைக்கும் மருத்துவப் பலன்கள்!

Type 1 Diabetes: இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை! 

பலாக் கொட்டையின் வியக்க வைக்கும் அற்புதப் பலன்கள்!

ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்வதால் இவ்வளவு நன்மைகளா? 

SCROLL FOR NEXT