ஸ்பெஷல்

மலேசியாவில் தீவிர நிலநடுக்கம்; மக்கள் வீதிகளில் தஞ்சம்!

கல்கி

மலேசியாவில் இன்று அதிகாலை சக்தி வய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் 6.8 ஆக பதிவான இந்த தீவிர நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. மேலும் இந்த நிலநடுக்கம் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து 157 கிலோ மீட்டர் தொலைவில் லூசன் தீவு பகுதி வரையில் உணரப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து மலேசிய நில அதிர்வு கண்காணிப்பு தேசிய மையம் தெரிவித்ததாவது;

மலேசியாவில் இன்று அதிகாலை ரிக்டர் அளவில் 6.8 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 504- கிலோ மீட்டர் தொலைவில் இந்த கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சக்தி வாயந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் குலுங்கின.இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

-இவ்வாறு அந்நாட்டு நில அதிர்வு கண்காணிப்பு தேசிய மையம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதவிவரங்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் இந்தோனேசியாவிலும் இன்று காலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

80 அடி உயர சிவபெருமான் சிலை எங்குள்ளது தெரியுமா?

ஆண்களை விட பெண்கள் ஏன் அதிகம் பேசுகிறார்கள் தெரியுமா?

ஒவ்வொன்றும் ஒரு ரகம்; தள்ளிப்போடுபவர்கள் மொத்தம் 5 ரகம்!

தமிழ் சினிமாவில் மாறாத விஷயங்கள் என எழுத்தாளர் சுஜாதா சொன்ன 20 சுவாரஸ்யமான விஷயங்கள்!

Male Heart Attack: ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான 7 காரணங்கள்! 

SCROLL FOR NEXT