ஸ்பெஷல்

35 லட்சம் நகைக்கடன்கள் தள்ளுபடி பெற தகுதியில்லை: தமிழக அரசு அறிவிப்பு!

கல்கி

தமிழக கூட்டுறவு வங்கிகளில் கடந்த ஆட்சி காலத்தில் பெறப்பட்ட 48 லட்சம் நகைக்கடன்களில் 35 லட்சம் பேருக்கு கடன் தள்ளுபடி பெற தகுதியில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம் வெளியிட்டிருக்கும் அரசாணையில் தெரிவிக்கப் பட்டதாவது:

திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. அந்த வகையில் இச்சலுகையை முடியாதவர்கள் யார் என்ற விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி 2021 கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகள் நகை கடன் தள்ளுபடி சலுகை பெற முடியாது. மேலும் '40 கிராமுக்கு மேல் நகையை வைத்தவர்களுக்கு தள்ளுபடி சலுகை கிடையாது; ஆதார் எண்ணை தவறாக கொடுத்தவர்கள் குடும்ப அட்டை எண் நகை வைக்கும்போது கொடுக்க தவறியவர்கள் ஆகியவர்களுக்கு தள்ளுபடி கிடையாது; கூட்டுறவு சங்க நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இந்த சலுகை பொருந்தாது; வெள்ளை நிற குடும்ப அட்டை வைத்திருந்தவர்கள் மற்றும் உரிய காலத்தில் நகை கடன் திருப்பி செலுத்திவர்களுக்கு இந்த சலுகை இல்லை. அந்த வகையில் தமிழக கூட்டுறவு வங்கிகளில் கடந்த ஆட்சி காலத்தில் பெறப்பட்ட 48 லட்சம் நகைக்கடன்களில் 35 லட்சம் பேருக்கு கடன் தள்ளுபடி பெற தகுதியில்லை

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஒன்பது வாசல் கடந்து மூலவரை தரிசிக்கும் கோயில் எங்குள்ளது தெரியுமா?

சூரியகாந்தி விதையின் வியக்க வைக்கும் மருத்துவப் பலன்கள்!

Type 1 Diabetes: இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை! 

பலாக் கொட்டையின் வியக்க வைக்கும் அற்புதப் பலன்கள்!

ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்வதால் இவ்வளவு நன்மைகளா? 

SCROLL FOR NEXT