பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக 3 நாடுகளுக்கு ஐரோப்பிய நேற்று சுற்றுப் பயணம் புறப்பட்டு சென்றார்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்ததாவது;
பிரமதம் மோடி நேற்று (மே 1) டெல்லியிலிருந்து 3 ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளார். மே 4-ம் தேதி வரையிலான இந்த பயணத்தில் ஜெர்மனி, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் செல்கிறார்.
-இவ்வாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் இன்று ஜெர்மனியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி, ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார விஷயங்களை இந்த சந்திப்பு வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர் டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சனின் அழைப்பின் பேரில் அதிகாரப்பூர்வ பயணமாக பிரதமர் மோடி கோபன்ஹேகனுக்கு புறப்படுகிறார். அங்கு அந்நாட்டு தொழிலதிபர்கள், டென்மார்க்கில் உள்ள இந்திய மக்களுடன் பிரதமர் மோடி சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது. மேலும்,டென்மார்க் நடத்தும் 2 –வது இந்தியா–நார்டிக் உச்சி மாநாட்டிலும் பிரதமர் பங்கேற்கிறார்.
இறுதியாக,மே 4-ம் தேதி பிற்பகல் இந்தியா திரும்பும் வழியில், பாரிஸில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோனை மோடி சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.