காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன் நண்பர் சும்நிமா உதாஸின் இல்லத்து திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக 4 நாடட்கள் பயணமாக கடந்த 2-ம் தேதி நேபாளம் புறப்பட்டு சென்றார்
இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை (மே 2) இரவு காத்மாண்டுவில் உள்ள புகழ்பெற்ற 'லார்ட் ஆப் தி டிரிங்க்ஸ்' எனும் இரவு விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.அப்போது அவர் தன்னருகே இருந்த ஒரு பெண்ணுடன் பேசியபடி உள்ள காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் நேபாளத்திற்கான சீன தூதரர் ஹௌ யாக்கி என்று கருதப்பட்ட நிலையில், அச்செய்தி உண்மைக்கு புறம்பானது என்பது உறுதியாயிற்று.
இதுகுறித்து 'லார்ட் ஆப் தி டிரிங்க்ஸ்' விடுதியின் செயல் அதிகாரி ரபின் ஷ்ரேஸ்தா தெரிவித்ததாவது;
ராகுல் காந்தி கடந்த திங்கள்ன்று (மே 2) எங்கள் விடுதிக்கு வந்து திருமண விருந்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் கலந்து கொண்டார். அச்சமயம் சீன தூதரகம் சார்பாக யாரும் கலந்து கொள்ளவில்லை. அந்த விருந்து நிகழ்ச்சியில் மணப்பெண் சும்நிமா உதாஸின் தோழிகளும் குடும்ப உறுப்பினர்களும் மட்டுமே கலந்து கொண்டனர் ராகுல் காந்தியுடன் அந்த வீடியோவில் உள்ள பெண் மணப்பெண்ணின் தோழி ஆவார்.
-இவ்வாறு அந்த விடுதி செயலதிகாரி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து காத்மாண்டு போஸ்ட் பத்திரிகையும் ராகுல் காந்தியுடன் அந்த வீடியோவில் இருந்தது மணமகளின் தோழிதான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.