ஸ்பெஷல்

9-ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்:பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

கல்கி

தமிழகத்தில் 9-ம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரையும்  தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும்படி அரசுப் பள்ளிகளுக்கு தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ச் தமிழக பள்ளிக்கல்வித் துறை தன் அறிக்கையில் தெரிவித்ததாவது;

தமிழக அரசுப் பள்ளிகளில் 9-ம் வகுப்புப் மாணவர்களுக்கு ஆல் பாஸ் வழங்கப் பட வேண்டும். அம்மாணவர்களின் இறுதி தேர்வு மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும். ஆனால் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு இது பொருந்தாது. அந்த மாணவர்களுக்கு தனித் தேர்வு நடத்தப்பட வேண்டும் 

-இவ்வாறு அறிவிக்கப் பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக காலதாமதமாக 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப் பட்ட நிலையில், பள்ளி கல்வித்துறையின் இந்த  அறிவிப்பு மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

80 அடி உயர சிவபெருமான் சிலை எங்குள்ளது தெரியுமா?

ஆண்களை விட பெண்கள் ஏன் அதிகம் பேசுகிறார்கள் தெரியுமா?

ஒவ்வொன்றும் ஒரு ரகம்; தள்ளிப்போடுபவர்கள் மொத்தம் 5 ரகம்!

தமிழ் சினிமாவில் மாறாத விஷயங்கள் என எழுத்தாளர் சுஜாதா சொன்ன 20 சுவாரஸ்யமான விஷயங்கள்!

Male Heart Attack: ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான 7 காரணங்கள்! 

SCROLL FOR NEXT