ஸ்பெஷல்

பிரிட்டனில் நம்பிக்கை வாக்கெடுப்பு; பிரதமர் போரிஸ் ஜான்சன் வெற்றி! 

கல்கி

பிரிட்டனில் பழமைவாத கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2019-ம் ஆண்டு வெற்றிபெற்று பிரதமராக பதவியேற்றார். அதையடுத்து 2020-ம் ஆண்டில் கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு எதிராக தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் போரிஸ் ஜான்சன் மது விருந்து நடத்திய விவகாரம் பெரும் விமரிசனத்துக்கு உள்ளானது. 

அரசாங்க விதிமுறைகளுக்கு எதிராக பிரதமரே இவ்வாறு நடந்து கொண்டதாக 'பார்ட்டி கேட்என பெயரிட்டு விமரிசித்தனர். இது தொடர்பாக பிரதமர் மீது அந்நாட்டு போலீஸார் விசாரணை நடத்தி அபராதமும் விதித்தனர். 'சட்டத்தை மீறியதால்  அபராதம் விதிக்கப்பட்ட முதல் பிரதமர்' என்ற அவப்பெயரும் போரிஸ் ஜான்சனுக்கு கிடைத்தது.

இந்நிலையில், ஆளும் பழமைவாத கட்சியினரே பிரதமர் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு கோரிக்கை விடுத்தனர். அதன்படி, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் ஜான்சனுக்கு ஆதரவாக 211 பேரும், எதிராக 148 பேரும் வாக்களித்தனர். 59% பேர் ஆதரவாக வாக்களித்ததால் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜான்சன் வெற்றி பெற்றதாக பிரிட்டன் நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.

முருகப்பெருமானின் அர்த்தமுள்ள திருநாமக் காரணங்கள்!

லெமன் கிராஸின் 11 ஆரோக்கிய நன்மைகள்!

கேன்சரை தடுக்கும் 7 வகை வெஜிடேரியன் உணவுகள் தெரியுமா?

வெப்பம் வாட்டி வதைக்குதா? இந்த தேங்காய்ப்பால் ஐஸ்கிரீம் ட்ரை பண்ணி பாருங்களேன்! 

வேதங்கள் வழிபட்ட சிவபெருமான் எங்கு வீற்றிருக்கிறார் தெரியுமா?

SCROLL FOR NEXT