ஸ்பெஷல்

அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் நிறுத்தம்!

கல்கி

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மழலையர் வகுப்புகளான எல்கேஜிற்றும் யூகேஜி வகுப்புகள் நிறுத்தப் படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

-இதுகுறித்து தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது;

தமிழகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு 2381 அரசு பள்ளிகளில் எல்கேஜி , மற்றும் யூகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இவை மூடப்பட்டு இதற்கு மாற்றாக அங்கன்வாடிகளில் நடைபெறும் மழலையர் வகுப்புகள் முறைப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும்.

தொடக்க கல்வி துறையில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கும் நிலையில் ஆசிரியர்களை ஒன்றாம் வகுப்பு முதல் பாடம் கற்பிக்க பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

-இவ்வாறு அரசு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த கடந்த அதிமுக ஆட்சியில் 2018 ஆம் ஆண்டு எல்கேஜி யூகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு, கிராமப்புறங்களில் மிகுந்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

நிமிர்ந்த நடைக்கு ஆதாரமான முதுகெலும்பை பராமரிக்க 10 எளிய வழிகள்!

புதுமைக்கொரு எடுத்துக்காட்டு; துணிச்சலுக்கு ஓர் அடையாளம் - HBD பார்த்திபன் Sir!

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

SCROLL FOR NEXT