ஸ்பெஷல்

16 மாவட்டங்களில் கனமழை; சென்னை வானிலை மையம்!

கல்கி

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றம் காரணமாக கடந்த 

அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் லேசானது முதல் கனமான மழைக்கு வாய்ப்பு உண்டு. அதாவது, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தருமபுரி, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

-இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் இரவில் லேசான மழை பெய்த நிலையில் தற்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில் கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, அங்கு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

காவிரியில் கடைமுழுக்காடி ஜன்மாவை கடைத்தேற்றுவோம்!

நிதானமாக இருப்பதால் கிடைக்கும் லாபம் என்ன தெரியுமா?

NISAR - இஸ்ரோ - நாசா கூட்டு முயற்சியில் பேரிடர் கண்காணிப்பு செயற்கைக்கோள்!

துணிந்தாருக்கு துக்கம் இல்லை!

இயற்கையிடம் சுறுசுறுப்பை கற்றுக் கொள்ளுங்கள்!

SCROLL FOR NEXT