ஸ்பெஷல்

அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் முதல் கறுப்பின பெண் நீதிபதி நியமனம்!

கல்கி

அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முதல் கறுப்பின பெண் நீதிபதியாக கேதன்ஜி பிரவுன் ஜாக்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 2020-ல் அமெரிக்க தேர்தல் பிரசாரத்தின்போது, தனது ஆட்சியில் கறுப்பின பெண் ஒருவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப் படுவார் என்று ஜோ பைடன் வாக்குறுதியளித்தார்.

அந்த வகையில் தேர்தலில் வென்று ஜோ பைடன் அதிபரான நிலையில், இப்போது அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தின் முதல் கறுப்பின பெண் நீதிபதியாக கேதன்ஜி பிரவுன் ஜாக்சன் பொறுப்பு ஏற்க உள்ளதாக அமெரிக்க செனட் உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்ததாவது:

அமெரிக்காவின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில்  பெண் நீதிபதி கேதன்ஜி பிரவுன் ஜாக்சனின் நியமனம் மற்றொரு படிக்கல். அவர் அமெரிக்க உச்சநீதி மன்றத்தில் பெண் நீதிபதியாக மிக சிறப்பாக செயல்படுவார் என்பது என் திடமான நம்பிக்கை. அமெரிக்க வரலாற்றின் இந்த மிக முக்கிய தருணத்தை அவருடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறேன்.

-இவ்வாறு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் பரிந்துரைக்கப்பட்ட நீதிபதி ஜாக்சன்,கொலம்பியா மாவட்ட (டிசி) அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றினார்.மேலும் இதற்கு முன்பு 2013 மற்றும் 2021 க்கு இடையில் டிசியில் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

புடவைக் கட்டும் பொழுது பெண்கள் செய்யக்கூடாத 9 தவறுகள்!

நிமிர்ந்த நடைக்கு ஆதாரமான முதுகெலும்பை பராமரிக்க 10 எளிய வழிகள்!

புதுமைக்கொரு எடுத்துக்காட்டு; துணிச்சலுக்கு ஓர் அடையாளம் - HBD பார்த்திபன் Sir!

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

SCROLL FOR NEXT