ஸ்பெஷல்

மோசமான வானிலை; அமர்நாத் யாத்திரை கேன்சல்!

கல்கி

நாட்டில் வருடந்தோறும் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிப்பதர்க்காக லட்சக்கணக்கான யாத்திரிகர்கள் புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர். ஆனால் இப்போது அங்கு மோசமான வானிலை நிலவுவதால், அமர்நாத் யாத்திரைக்கு தடைவிதிக்கப் பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

-இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது;

இந்த ஆண்டு புனித யாத்திரை கடந்த ஜூன் 30-ம் தேதி தொடங்கியது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பனிலிங்கத்தை வழிபட்டுள்ளனர். ஆனால், கடந்த 7-ம் தேதி அமர்நாத் கோயில் பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டு பலத்த மழை பெய்து, காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

அதனால் அங்கு கூடாரங்களில் தங்கியிருந்த பக்தர்கள் இழுத்து செல்லப்பட்டு இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். 40 பேரை காணவில்லை. புனித யாத்திரை மேற்கொண்டிருந்த 15 ஆயிரம் பேர் பத்திரமாக மீட்கப் பட்டனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படை, திபெத் எல்லை போலீஸ் படை, எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீஸார் இணைந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அங்கு மோசமான வானிலை நீடிப்பதால் அமர்நாத் புனித யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இரு அடிவார முகாம்களில் இருந்தும் பக்தர்கள் குழு புனித யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

-இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

'கெவ்ரா வாட்டரில்' இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

அதிக நேரம் AC-யில் இருக்காதீங்க ப்ளீஸ்… மீறி இருந்தா? அச்சச்சோ! 

இந்த 7 சொற்றொடர்களைப் பயன்படுத்தினால் நீங்களும் ஒரு புத்திசாலி பெண்தான்!

Cape Rain Frog: வித்தியாசமான தென்னாப்பிரிக்க தவளை இனம்! 

விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

SCROLL FOR NEXT