ஸ்பெஷல்

மனித உரிமை மீறல்: நயன்தாரா, விக்னேஷ் சிவன் மீது வழக்குப் பதிவு!

கல்கி

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது தேசிய மனித உரிமை ஆணையம் மனித உரிமை மீறல் வழக்கு பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த 9-ம் தேதியன்று மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் கோலாகலமாக திருமணம் நடந்தது. ரிசார்ட்டையடுத்த கடற்கரையில் செட் போட்டு நடந்த இத்திருமணத்தில் 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப் பட்ட நிலையில், திரையுலக பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்தினர். அச்சமயம் மகாபலிபுரத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதுமட்டுமின்றி பொதுமக்கள் கடற்கரைக்கே செல்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், கடற்கரை பொது இடம் என்பதால் நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு திருமணம் நடந்த ஜுன் 9-ம் தேதி அன்று ஏன் பொதுமக்களை அனுமதிக்கவில்லை. 

இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து நயந்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. 

80 அடி உயர சிவபெருமான் சிலை எங்குள்ளது தெரியுமா?

ஆண்களை விட பெண்கள் ஏன் அதிகம் பேசுகிறார்கள் தெரியுமா?

ஒவ்வொன்றும் ஒரு ரகம்; தள்ளிப்போடுபவர்கள் மொத்தம் 5 ரகம்!

தமிழ் சினிமாவில் மாறாத விஷயங்கள் என எழுத்தாளர் சுஜாதா சொன்ன 20 சுவாரஸ்யமான விஷயங்கள்!

Male Heart Attack: ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான 7 காரணங்கள்! 

SCROLL FOR NEXT