ஸ்பெஷல்

ஆன்லைன் கேம்ஸுக்கான ஜிஎஸ்டி வரி; அதிகரிக்க மத்திய அரசு திட்டம்!

கல்கி

மத்திய அரசு ஆன்லைன் விளையாட்டுகள், கேசினோ, குதிரைப் பந்தயம் உள்ளிட்டவை மீதான ஜிஎஸ்டி வரியை 18%ல் இருந்து 28% ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர்கள் குழுவின்  பரிந்துரையில் தெரிவிக்கப் பட்டதாவது:

டெல்லியில் இரண்டொரு நாட்களில் நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்படும். அந்த வகையில் ஆனலைன் விளையாட்டுக்கள், குதிரைப் பந்தயம், கேசினோ உள்ளிட்ட கேளிக்கை விளையாட்டுகள் மற்றும் கிரிக்கெட், போக்கர், ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தற்போது சரக்கு மற்றும் சேவை வரி 18% ஆக உள்ளது.

இந்த நிலையில் ஆன்லைன் விளையாட்டு வருவாய்க்கான வரியை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்து மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தலைமையிலான எட்டு பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவினரின் பரிந்துரையின் அடிப்படையில், 18% ஆக உள்ள ஜிஎஸ்டியை 28% ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

கார்த்திகை மாதத்தில் வீட்டு வாசலில் இரண்டு விளக்கு ஏற்றுவது ஏன் தெரியுமா?

இளம் வயதினரைத் தாக்கும் புற்று நோய்கள் என்னென்ன தெரியுமா? 

கென்யாவில் 'தேனீ வேலி' - யானைகளையும் மனிதர்களையும் காக்கும் நல்முயற்சி!

விண்வெளியில் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்க முடியுமா?

தொற்று நோய்களைப் புரிந்துகொள்வது எப்படி?

SCROLL FOR NEXT