ஸ்பெஷல்

புதுச்சேரி சட்டசபை; இன்று பட்ஜெட் தாக்கல்! 

கல்கி

புதுச்சேரி மாநில வளர்ச்சிப் பணிகளுக்கு மத்திய அரசு 10 ஆயிரத்து 700 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளித்த நிலையில் இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 

இதுகுறித்து புதுச்சேரி அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது; 

புதுச்சேரி சட்டபேரவையில் இன்று முதல் 30-ம் தேதி வரை  பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்வுள்ளது. இன்று காலை பட்ஜெட் தாக்கல் செய்யப் படுவதை முன்னிட்டு அதனை நேரடியாக சமூக வலைதளம் மற்றும் கேபிள் டி.வி.க்களில் ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த மாதம் 10-ம் தேதி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர், காலவரையறையின்றி சபை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.. பட்ஜெட்டுக்கு மத்திய அரசின் அனுமதி கிடைக்காததால் தான் சபை ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில், தற்போது புதுவையின் பட்ஜெட் ரூ.10 ஆயிரத்து 700 கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்று காலை 9.30 மணிக்கு புதுவையில் சட்டசபை கூட்டம் தொடங்க உள்ளது. வருகிற 30-ஆம் தேதி வரை கூட்டம் நடைபெறும். இதில் முக்கியமாக முதல்வரும், நிதி அமைச்சருமான ரங்கசாமி இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 

இதேபோல் இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரை நேரடியாக இணையதளம் மற்றும் கேபிள் டிவி வழியாக காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. டுவிட்டர், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை ஏற்பாடு செய்துள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ளது. 

என்னை துறந்து சென்றவனும் என்னால் துறக்கப்பட்டவனும்!

இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் சமையல் எண்ணெய்கள்!

இந்த ரகசியம் மட்டும் தெரிஞ்சா இனி குளிர்ந்த நீரில்தான் குளிப்பீங்க! 

கார்த்திகை மாதத்தில் வீட்டு வாசலில் இரண்டு விளக்கு ஏற்றுவது ஏன் தெரியுமா?

இளம் வயதினரைத் தாக்கும் புற்று நோய்கள் என்னென்ன தெரியுமா? 

SCROLL FOR NEXT