ஸ்பெஷல்

M.Phil படிப்பு இனி அவசியமில்லை: யுஜிசி அறிவிப்பு!

கல்கி

இந்தியாவில் வருகிற கல்வி ஆண்டு முதல் Phd படிப்பதற்கு M.Phil முடித்திருப்பது கட்டாயமல்ல என்றும் எம்.பில் படிப்பு நீக்கப்படுவதாகவும் யுஜிசி (யுனிவர்சிடி கிராண்ட் கமிஷன்) அறிவித்துள்ளது

நாட்டில் பிஎச்டி படிப்பதற்கான புதிய வரைவு அறிக்கையை யுஜிசி தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது;

இந்தியாவில் பிஎச்டி படிக்க இனி எம்.பில் படிப்பு முடித்திருப்பது கட்டாயமல்ல. இந்த புதிய நடைமுறை 2022- 23 கல்வி ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வருவிருக்கிறது. ஆனால் இந்த புதிய அறிவிப்பின் காரணமாக ஏற்கனவே எம்.பில் படித்து அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

-இவ்வாறு யுஜிசி தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையின்(NEP) பல்வேறு அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதன் புது அம்சமாக இந்த அறிவிப்பை  யுஜிசி வெளியிட்டுள்ளது.

கோதுமையை Pregnancy Tester ஆக பயன்படுத்திய பண்டைய எகிப்து பெண்கள்!

சிறுகதை - உண்மைகள் உறங்கட்டும்!

இந்த 10 விஷயங்களை ஒருபோதும் பிறரிடம் எதிர்பார்க்காதீர்கள்… மீறினால்? 

அதிசய எண் 108 பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாங்க!

ஆன்மிகக் கதை - கங்கையின் மகிமை!

SCROLL FOR NEXT