ஸ்பெஷல்

செஸ்ஸபிள் மாஸ்டர் தொடர்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா!

கல்கி

செஸ்ஸபிள் மாஸ்டர் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா.

செஸ்ஸபிள் மாஸ்டர் தொடருக்கான ஆன்லைன் செஸ் போட்டிகள் 9 தொடர்களாக கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியதுமொத்தம் 16 வீரர்கள் மட்டுமே பங்கேற்ற இந்த போட்டியில் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாச்டர்  பிரக்ஞானந்தாவும் ஒருவர் ஆவார். இந்நிலையில் காலிறுதிப் போட்டியில் சீனாவின் வெய்  என்ற போட்டியாளரை வென்று அரையிறுதிக்குத் பிரக்ஞானந்தா தகுதி பெற்றார்.

இந்நிலையில் அரையிறுதியிப் போட்டியில் நெதர்லாந்தைச் சேர்ந்த  அனிஷ் கிரியை  எதிர்த்து பிரக்ஞானந்தா  ஆடினார். இந்த போட்டி 4  ரேபிட் சுற்றுகளாக நடத்தப்பட்டது. இதில் இருவரும் தலா ஒரு போட்டியில் வெற்றி, இரண்டு ஆட்டம் டிரா ஆனதால் 2-2 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையை எட்டினர். வெற்றியை தீர்மானிக்க பிளே ஆஃப் ஆட்டம் நடத்தப்பட்டது

மொத்தம் 3 பிளிட்ஸ் போட்டி கொண்ட பிளே ஆஃப் சுற்றில் முதல் போட்டியை  பிரக்ஞானந்தா வென்றார். 2-வது  போட்டியை டிரா செய்து டை பிரேக்கரில் 1.5 – 0 .5 என்ற புள்ளிக்கணக்கில் அனிஷ் கிரியை வீழ்த்தி பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

மனம் வறண்டு போகும்போது மழை நீரில் மீன் பிடித்தால்?

தேனுடன் லவங்கப்பட்டை சேர்ந்து வழங்கும் 11 அற்புதப் பலன்கள்!

சிவபெருமானை எந்த மலர் கொண்டு வழிபட என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

கனமழையின் போது ஏசி பயன்படுத்தலாமா? நன்மைகளும், தீமைகளும்! 

நதியின் நடுவில் ஈரக் கருவறை உள்ள கோயில் எது தெரியுமா?

SCROLL FOR NEXT