ஸ்பெஷல்

அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் ஆலோசனை!

கல்கி

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று கழக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

நாளை அமாவாசை தினத்தை முன்னிட்டு, ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தப் பட உள்ளதாக தெரிவிக்கப் பட்ட நிலையில் முன்கூட்டி இன்றே இபிஎஸ் கூட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சக்கட்ட மோதலை ஏற்படுத்தியுள்ள நிலையில், .பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரது பெயர்கள் இல்லாமல், தலைமை நிலைய செயலாளர் பெயரில் நேற்று கூட்டத்திற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டதாவது:

அதிமுக சட்ட திட்ட விதி 20வின்படி, ஒட்டுமொத்த நிர்வாக பொறுப்புகள் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கே உள்ளது. அதன்படி இருவரின் ஒப்புதலை பெற்றுத்தான் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.ஆனால் இருவரின் ஒப்புதலின்றி கழக தலைமை நிலைய செயலாளர் என்ற பெயரில் விதிக்கு எதிராக இக்கூட்டத்துக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக கட்சி  விதிமுறைகளுக்குப் புறம்பாக இக்கூட்டத்தில் ஏதேனும் முடிவுகள் எடுக்கப்பட்டால், அது செல்லுபடியாகாது.

-இவ்வாறு ஓபிஎஸ் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் அதிமுக பொருளாளர் பதவிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்படலாம் என்றும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி  பழனிச்சாமி நியமிக்கப் படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இளம் வயதினரைத் தாக்கும் புற்று நோய்கள் என்னென்ன தெரியுமா? 

கென்யாவில் 'தேனீ வேலி' - யானைகளையும் மனிதர்களையும் காக்கும் நல்முயற்சி!

விண்வெளியில் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்க முடியுமா?

தொற்று நோய்களைப் புரிந்துகொள்வது எப்படி?

வரமிளகாய் வத்தக்குழம்பும், ஸ்பைசி தொண்டக்காய் வறுவலும்!

SCROLL FOR NEXT