ஸ்பெஷல்

#Breaking: நடிகர் விவேக் மரணத்துக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல: ஆய்வறிக்கை தகவல்!

கல்கி

நடிகர் விவேக் உயிரிழப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என்று தேசிய மருத்துவக்குழு தகவல் தெரிவித்துள்ளது.

நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதி கொரோனா தடுப்பூசி போட்டுகொண்ட நிலையில், அதற்கடுத்த 2-வது நாளில் (ஏப்ரல் 17) மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மரணம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தான் உயிரிழந்தார் என சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டது. இதையடுத்து விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் நடிகர் விவேக் மரணத்துக்கு கொரோனா தடுப்பு ஊசி காரணமா என் விசாரிக்கும்படி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, நடிகர் விவேக் மரணம் குறித்து 8 வாரத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மத்திய சுகாதாரத்துறைக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

  1. இந்நிலையில்,நடிகர் விவேக் உயர் ரத்த அழுத்தம் காரணமாக கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக,ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட தேசிய குழு ஆய்வு அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,நடிகர் விவேக்கின் மரணத்திற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தேசிய மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.

ஆண்களை விட பெண்கள் ஏன் அதிகம் பேசுகிறார்கள் தெரியுமா?

ஒவ்வொன்றும் ஒரு ரகம்; தள்ளிப்போடுபவர்கள் மொத்தம் 5 ரகம்!

தமிழ் சினிமாவில் மாறாத விஷயங்கள் என எழுத்தாளர் சுஜாதா சொன்ன 20 சுவாரஸ்யமான விஷயங்கள்!

Male Heart Attack: ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான 7 காரணங்கள்! 

சிரஞ்சீவியாக உலகில் வாழும் ஏழு பேர் யார் தெரியுமா?

SCROLL FOR NEXT