ஸ்பெஷல்

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: உயிர் தப்பிய கேப்டன் வருண் சிங் மரணம்!

கல்கி

கடந்த8-ம்தேதி அன்று குன்னூரில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 13 நபர்கள் உயிரிழந்தனர். இந்திய முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 ராணூவ வீரர்கள் கடந்த 8-ம் தேதி கோவை சூலூரிலிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் வெலிங்டன் செல்லும்போது, குன்னூர் அருகே காட்டேரி கிராமத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் 13 பேர் உயிரிழந்த நிலையில், க்ரூப்கேப்டன்வருண்சிங்உயிர்பிழைத்தார்.

அவர் பெங்களூரில் உள்ள கமாண்ட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலையில் வருண் சிங் உயிரிழந்ததாக இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி வருண் சிங்குக்கு சவுரிய சக்ரா விருது வழங்கி கவுரவித்தது இந்திய அரசு. 39 வயதான வருண் சிங் மறைவுக்கு தலைவர்கள் தங்களின் இரங்கல்களை பதிவு செய்து வருகின்றனர்.

பிரதமர் மோடி தன் டிவிட்டரில் வெளியிட்ட இரங்கல் செய்தி:

நமது நாட்டிற்காக பணியாற்றிய குரூப் கேப்டன் வருண் சிங்கின் மறைவு செய்தி மிகவும் துயருற்றேன். அவருடைய சேவையை இந்த நாடு என்றும் மறக்காது. அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

-இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் வெளியிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் தெரிவித்ததாவது:

வருண் சிங்கின் வீரமும் அர்ப்பணிப்பும் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும். நம்முடைய இதயத்தில் அவர் என்றும் வாழ்வார்.

-இவ்வாறு தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

Male Heart Attack: ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான 7 காரணங்கள்! 

சிரஞ்சீவியாக உலகில் வாழும் ஏழு பேர் யார் தெரியுமா?

சிறுகதை – தத்து!

75 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த நியண்டர்தல் பெண்ணைப் பார்க்க வேண்டுமா? வாருங்கள்!

நீங்கள் வாழ்க்கையில் சரியான பாதையில் தான் செல்கிறீர்கள் என்பதற்கான 3 அறிகுறிகள்! 

SCROLL FOR NEXT