திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா 
ஸ்பெஷல்

எம்.எஸ். அம்மா வாழ்வில் மறக்க முடியாத சில தருணங்கள்!

செப்டம்பர் 16, திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா பிறந்த தினம்

கல்கி டெஸ்க்

சையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா 1916 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ம் தேதி இசைக்கலைஞர் மதுரை சண்முக வடிவு அம்மாளுக்கும், வழக்கறிஞர் சுப்பிரமணிய ஐயருக்கும் மகளாய் பிறந்தார். இவரது வாழ்வில் நடைபெற்ற சில மறக்க முடியாத தருணங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1926ம் ஆண்டு தமது 10வது வயதில் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயில சேர்க்கப்பட்டார் எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா.

1933ம் ஆண்டு சென்னை மியூசிக் அகாடமியில் தமது முதல் கச்சேரியை நிகழ்த்தினார் எம்.எஸ். அம்மா.

1935ம் ஆண்டு தமது 19வது வயதில் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியின் வீட்டு திருமணத்தில் இவரது இசைக் கச்சேரி நடைபெற்றது.

1940ம் ஆண்டு இவர் தமது 24வது வயதில் டி,சதாசிவத்தை திருநீர்மலையில் திருமணம் புரிந்தார்.

1940ம் ஆண்டு ஜூலை மாதம் இவரது ‘சகுந்தலை’ திரைப்படமும் 1941ம் ஆண்டு ‘சாவித்திரி படமும் வெளியானது.

1945ம் ஆண்டு தீபாவளி திருநாளில் தமிழில் இவரது ‘மீரா’ திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் 1947ல் ‘மீரா’ திரைப்படம் வெளியிடப்பட்டது.

1954ம் ஆண்டு எம்.எஸ். அம்மாவுக்கு ‘பத்ம பூஷன்’ விருது வழங்கப்பட்டது.

1955ம் ஆண்டு மெட்ராஸ் ‘மியூசிக் அகாடமி’ பில்டிங் ஃபண்டிற்கான பெனிபிட் கச்சேரியை நிகழ்த்தினார் எம்.எஸ். அம்மா.

1956ம் ஆண்டு எம்.எஸ். சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்றார்.

1962ம் ஆண்டு ஆகஸ்ட் 05ம் தேதி இவரது தாயார் சண்முகவடிவு காலமானார்.

1963ம் ஆண்டு ஸ்காட்லாந்தின் எடின்பர்க்கில் நடைபெற்ற கலை விழாவில் எம்.எஸ். அம்மாவின் இசைக் கச்சேரி நடைபெற்றது.

1963ம் ஆண்டு எம்.எஸ்.அம்மா பாடி வெளியான வேங்கடேச சுப்ரபாதம் ஆல்பம் வெளியிடப்பட்டது.

1966ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி ஐ.நா. சபையில் இவரது கச்சேரி நிகழ்த்தப்பட்டது.

1967ம் ஆண்டு ரவீந்திர பாரதி கலாசார அகாடமியின் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

1968ம் ஆண்டு, ‘சங்கீத கலாநிதி’ என்ற பட்டத்தைப் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார் எம்.எஸ். அம்மா.

1970ம் ஆண்டு இவர் பாடிய விஷ்ணு சஹஸ்ரநாமம் & பஜ கோவிந்தம் ஆல்பம் வெளியிடப்பட்டது.

1974ம் ஆண்டு பொதுச் சேவைக்கான, ‘ரமோன் மக்சேசி’ விருதைப் பெற எம்.எஸ். அம்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1974ம் ஆண்டு சங்கீத நாடக அகாடமியின் உறுப்பினராக எம்.எஸ். அம்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1975ம் ஆண்டு எம்.எஸ். அம்மாவுக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

1975ம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாக எம்.எஸ். அம்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1975ம் ஆண்டு திருப்பதி கோயிலில் எம்.எஸ். அம்மா குரலில் வேங்கடேஸ்வர சுப்ரபாதம் ஒலிபரப்பப்பட்டது.

1977ம் ஆண்டு நியூயார்க் மற்றும் பிட்ஸ்பர்க்கில் உள்ள இந்து கோயில்களுக்கு நிதி திரட்டுவதற்காக அமெரிக்காவின் கடற்கரையிலிருந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டார் எம்.எஸ். அம்மா.

1979ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் உள்ள கைராகரில் உள்ள இந்திரா கலாசங்கீத் விஸ்வவித்யாலயாவிடமிருந்து எம்.எஸ். அம்மா கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார்.

1980ம் ஆண்டு எம்.எஸ். அம்மா குரவில் அன்னமாச்சார்யா பஞ்சரத்னா ஆல்பம் வெளியிடப்பட்டது.

1988ம் ஆண்டு எம்.எஸ். அம்மா காளிதாஸ் சம்மான் விருதைப் பெற்றார்.

1990ம் ஆண்டு தேசிய ஒருங்கிணைப்புக்கான இந்திரா காந்தி விருதை எம்.எஸ்.அம்மா பெற்றார்.

1997ம் ஆண்டு ஜூன் மாதம் மியூசிக் அகாடமியில் தமது கடைசி பொதுக் கச்சேரியை நிகழ்த்தினார் எம்.எஸ். அம்மா.

1997ம் ஆண்டு ஸ்வரலயா புரஸ்கார் விருதைப் பெற்றார் எம்.எஸ்.அம்மா.

1997ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் தேதி இவரது கணவர் டி.சதாசிவம் காலமானார்.

1998ம் ஆண்டு எம்.எஸ். அம்மா இந்தியாவின் உயரிய குடிமகன் விருதான ‘பாரத ரத்னா’வைப் பெற்றார். இந்த விருதைப் பெற்ற முதல் இசைக்கலைஞர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

2004ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதி வாழ்நாள் சாதனையாளர் விருது எம்.எஸ். அம்மாவுக்கு வழங்கப்பட்து.

2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மா காலமானார்.

மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள் அவரது வாழ்வில் மிகவும் முக்கியமானவை என்றாலும் இடையிடையே பல்வேறு முக்கியமான நிகழ்ச்சிகளும் பெருமைகளும் இவரை தேடித் தேடி வந்தடைந்து அவருக்குப் புகழ் சேர்த்தன. எம்.எம். அம்மாவின் பிறந்த தினமான இன்று, இசை உலகுக்கும் சமூகத்துக்கு அவர் செய்த பெரும் நன்மைகளை நினைவில் நிறுத்துவோம்.

கடிகாரங்கள் காட்டும் 10 மணி 10 நிமிடம் - தத்துவம் என்ன?

இரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கும் 5 பானங்கள்!

தமிழ்நாட்டைத் துருக்கியாக்கி, கேரளாவை ஈராக்காக்கி... என்னங்கடா சொல்லவறீங்க?

ஒரே கனவு இருவருக்கு வேறு வேறு பலன்களைத் தருவது ஏன்?

வீழ்ச்சியடைந்து வரும் ஆந்திரப் பிரதேச மாநில கொண்டபள்ளி பொம்மைகள்... கலை காப்பாற்றப்படுமா?

SCROLL FOR NEXT