ஸ்பெஷல்

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி

ருக்மிணி அம்மாள்

மரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் எழுத்தாற்றல் குறித்தும், அவரது பத்திரிகையுலகப் பணி குறித்தும் நாம் அனைவரும் நன்கறிவோம். அவர் எழுதாத விஷயம் இல்லை என்பதும் நமக்குத் தெரியும். ஆனால், அவரது மனைவி ருக்மிணி அவர்களும் மிக அழகான குட்டிக் குட்டிக் கவிதைகளையும் பாடல்களையும் எழுதியும், படித்தும், பாடியும் உள்ளார் என்பது பல பேருக்குத் தெரிய வாய்ப்பில்லை. அவர் சிறந்த பொருள் மிகுந்த பாடல்களை, தனது பேரக்குழந்தைகளுக்குப் பாடிக் காட்டுவார். அப்பாடல்களை அவரே எழுதியும் இருப்பார்.

உலக சிட்டுக் குருவி தினமாகிய இன்று (20.03.2023) ருக்மிணி அம்மாள் எழுதிப் பாடிய, நம் மனதை மகிழ்விக்கும் பாடலை, குழந்தைகளை மகிழ்விக்கும் மிக எளிமையானப் பாடலை இங்கே பிரசுரம் செய்வதில் கல்கி குழுமம் பெருமிதம் கொள்கிறது.

ருக்மிணி அம்மாள்

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி சொல்லாயோ?

                –  குருவி சேதி சொல்லாயோ? - நீ

திரிந்து பறந்து ஓடி வந்து சேதி சொல்லாயோ?

கிழ மரத்தில் ஏறிக்கொண்டு பூ கொய்வாயோ?
                     – குருவி பூ கொய்வாயோ? – நீ

மாலதிப்பூ கொடியில் ஊஞ்சல் ஆடப் போறாயோ?

நாகப் பழம் கோதித் தின்ன தாவிப் போறாயோ

                 - குருவி தாவிப் போறாயோ? – நீ

றித்து கொஞ்சம் எந்தனுக்கு தின்ன தாராயோ?

குச்சி பொறுக்கி கூட கட்ட குதித்துப் போறாயோ?

              - குருவி குதித்துப் போறாயோ – நீ

முட்டையிட்டு குஞ்சு பொரித்து மகிழப் போறாயோ!

5 Cool experiments for young science lovers!

உண்டியலின்றி உயர்ந்து நிற்கும் பாலாஜி!

கவிதை - மாற்றம் வேண்டும்!

60 + வயது... அழகு நிலையம் செல்வது எதற்கு?

சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி சந்தோஷமாக வாழ்வோம்!

SCROLL FOR NEXT