ஸ்பெஷல்

சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: படகில் பயணிகள் மீட்பு!

கல்கி

சென்னையில் பெய்த கனமழையால் சுரங்கப்பாதைகளில் நீர் தேங்கி, அவற்றில் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை அரங்கநாதன் சுரங்கப் பாதை வழியாக ச் செல்ல முயன்ற அரசுப்பேருந்து ஒன்று இன்று காலை வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது. பயணிகள் படகு மூலம் மீட்கப் பட, பேருந்தை மீட்கும் பணியில் தீயணைப்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையின் பிரதான சுரங்கப்பாதையான அரங்கநாதன் சுரங்கப்பாதையிலும் மழைநீர் தேங்கியதால் யாரும் உள்ளே செல்லாத வகையில் தடுப்புகள் ஏற்படுத்தி போக்குவரத்து நிறுத்தப்பட்திருந்தது. இந்நிலையில் இன்று காலை போரூரிலிருந்து மந்தைவெளிக்கு செல்லும் அரசுப் பேருந்து, மாற்றுப்பாதையில் செல்ல வலியுறூத்தப் பட்டதையும் மீறி இன்று காலை அரங்கநாதன் சுரங்கப்பாதை வழியாக செல்ல முற்பட்டது. பாதி வழியில் வெள்ளநீரில் சிக்கி பேருந்து நின்றது.

இதனையடுத்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பேருந்தில் இருந்த 5 பயணிகள் உட்பட பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை படகு மூலம் மீட்டனர் பின்பு பேருந்தை மீட்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மாநகர போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

80 அடி உயர சிவபெருமான் சிலை எங்குள்ளது தெரியுமா?

ஆண்களை விட பெண்கள் ஏன் அதிகம் பேசுகிறார்கள் தெரியுமா?

ஒவ்வொன்றும் ஒரு ரகம்; தள்ளிப்போடுபவர்கள் மொத்தம் 5 ரகம்!

தமிழ் சினிமாவில் மாறாத விஷயங்கள் என எழுத்தாளர் சுஜாதா சொன்ன 20 சுவாரஸ்யமான விஷயங்கள்!

Male Heart Attack: ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான 7 காரணங்கள்! 

SCROLL FOR NEXT