ஸ்பெஷல்

உக்ரைனில் போர் பதற்றம்; அமெரிக்க மற்றும் ரஷ்யப் படைகள் குவிப்பு!

கல்கி

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னர் உக்ரைன் தனி நாடாக பிரிந்துவிட்ட நிலையில், உக்ரனை தன்னுடன் இணைக்க ரஷ்யா பலகட்ட முயற்சிகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து வருவதால், அப்பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு எத்ரிப்பு தெரிவிக்கும் வகையில், ஐரோப்பிய யூனியனின் நேட்டோ படைகளுடன் அமெரிக்கப் படைகளும் உக்ரைன் எல்லைப் பகுதிகளில் விரைந்துள்ளன. அமெரிக்க மற்றும் இங்கிலாந்து படைகளில் 8,500 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.அமெரிக்காவின் 6 F-15s ரக போர் விமானங்களும், பெல்ஜியத்தின் F-16s ரக போர் விமானங்களும் வான்வழி பாதுகாப்பை உறுதி செய்ய பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ரஷியாவின் சார்பில்  1 லட்சம் வீரர்கள் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளதாகவும், வான்வழி, தரைவழி, மற்றும் சைபர் தாக்குதலுக்கும் தயார் நிலையில் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

ரஷியா தனது படையெடுப்பை நிகழ்த்தும் பட்சத்தில், உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகள் பதில் தாக்குதலில் ஈடுபடும் வகையில் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளன.

80 அடி உயர சிவபெருமான் சிலை எங்குள்ளது தெரியுமா?

ஆண்களை விட பெண்கள் ஏன் அதிகம் பேசுகிறார்கள் தெரியுமா?

ஒவ்வொன்றும் ஒரு ரகம்; தள்ளிப்போடுபவர்கள் மொத்தம் 5 ரகம்!

தமிழ் சினிமாவில் மாறாத விஷயங்கள் என எழுத்தாளர் சுஜாதா சொன்ன 20 சுவாரஸ்யமான விஷயங்கள்!

Male Heart Attack: ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான 7 காரணங்கள்! 

SCROLL FOR NEXT