‘அரசியல்’ என்ற வார்த்தையைக் கேட்டாலே, பலபேருக்கு எதிர்மறை எண்ணங்கள்தான் அதிகம் தோன்றும். காரணம் இன்றைய நிலவரம் அப்படி. ஆனால், இந்த நிலையை மாற்றலாம், நம்மால் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று நினைப்பவர்கள் ஒரு சிலர் உண்டு. அத்தகைய தீவிர எண்ணம் உடையவர்கள் எப்படி இந்த நேர்மறையான நிலைப்பாட்டை தொடக்கம் முதல் முடிவு வரை நிலை நிறுத்திக்கொள்ளலாம் என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
நீங்கள் அரசியல்வாதியாகலாம் என்பதை எப்படி உணர்வது?
ஒரு நல்ல அரசியல்வாதியாக மாறுவதற்கு நம்மிடம் இயற்கையாக சில குணங்கள் இருக்க வேண்டும். பொது சேவையில் உண்மையான ஆர்வமும் சமூகத்தின் தேவைகள் பற்றிய ஆழமான புரிதலும் இருக்க வேண்டும். பரிதாபம், ஒருமைப்பாடு மற்றும் வலுவான தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும் திறன் ஆகியவைதான் ஒரு அரசியல்வாதிக்கு இயல்பாகவே இருக்க வேண்டிய அத்தியாவசிய குணங்களாகும். இந்தக் குணாதிசயங்கள் நம்பிக்கையைத் தட்டியெழுப்பவும், மக்களுடன் நல்லதொரு தொடர்பில் இருக்கவும் உதவுகின்றன.
என்னென்ன செய்வது?
சிறந்த சிந்தனை, சிக்கலைத் தீர்ப்பது மற்றும் பயனுள்ள தலைமைத்துவம் போன்ற திறன்களை வளர்த்துக்கொள்வது மிகவும் முக்கியம். ஒரு நல்ல அரசியல்வாதி அவருக்கான கொள்கை உருவாக்கம், பேச்சுவார்த்தை மற்றும் மோதல் ஏற்படும்போது அதற்கான எதார்த்த தீர்வை கொண்டுவருவது ஆகியவற்றில் நன்கு தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும். அதற்கு தொடர்ந்து கற்பது மற்றும் சமூகப் பிரச்னைகளைப் பற்றி அறிந்து வைத்து அதைப் பற்றிய நல்ல அறிவாற்றலுடன் கலந்த தகவலறிந்த முடிவுகளை எடுப்பதுதான் ஒரு அரசியல்வாதியின் முழுநேர முதன்மை வேலையாகும்.
நல்ல உள்ளம் கொண்ட அரசியல்வாதியாக உங்களை நிலைநிறுத்திக் கொள்ள, நீங்கள் சாமானிய மக்கள் முதல், கட்சி உறுப்பினர்கள் வரை அனைவரின் நம்பிக்கைக்கு அடித்தளமாகவும், உண்மையாகவும் இருப்பது மிகவும் முக்கியம். அதற்கு உறுப்பினர்களுடன் தொடர்ந்து உரையாடுவது, அவர்களின் கவலைகளைக் கேட்பது, செயல்கள் மற்றும் முடிவுகளில் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பது போன்றவை காலப்போக்கில் பிறரிடம் உள்ள நம்பிக்கையையும் நம்பகத்தன்மையையும் ஒவ்வொருக்குள்ளும் பராமரிக்க உதவும். பணிவு, நன்றியுணர்வை காட்டுதல் மற்றும் எல்லாருடைய கருத்துகளுக்கு செவிசாய்ப்பது ஆகியவை சமூகத்துடன் ஒரு நேர்மறையான உறவை உங்களை வளர்க்க செய்கிறது.
கூடுதலாக, பொது மற்றும் தனிப்பட்ட ஆரோக்கியமான வாழ்க்கையில் சமநிலையை பராமரிப்பது, மன அழுத்தத்தை திறம்பட நிர்வகிப்பது ஆகியவை நீண்டகால உங்களின் நிலைத்தன்மைக்கு மிகவும் முக்கியம். இப்படி சுயப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலமும், ஆதரவான குழுவுடன் உங்களை இணைத்துகொள்வதன் மூலமும், ஒரு அரசியல்வாதி தனது வாழ்க்கை முழுவதும் அர்ப்பணிப்புடனும் வலிமையுடனும் தொடர்ந்து பணியாற்ற முடியும்.
உங்களுக்கு பின்னும் இந்நிலையை எப்படி நிலைநிறுத்துவது?
கட்சி உறுப்பினர்களும் அல்லது உங்களைப் பின்பற்றுபவர்களும் உங்களை போலவே நல்ல மனப்பான்மையைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய, அவர்களுக்கு முன்மாதிரியாக வழிநடத்துங்கள். கட்சிக்குள் ஒவ்வொருக்குள்ளும் கொடுத்துக்கொள்ளும் மரியாதை, பாசம் மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றின் கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும். அவர்களின் திறன்கள் மேம்படுத்த பயிற்சி மற்றும் மேம்பாட்டு வாய்ப்புகளை வழங்க வேண்டும். சமூகத்திற்கு நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் சேவை செய்வதன் முக்கியத்துவத்தை தவறாமல் எந்நேரமும் தெரிவித்து கொண்டிருக்க வேண்டும். மேலும், இந்த மதிப்புகளை வெளிப்படுத்துபவர்களை அங்கீகரித்து வெகுமதி அளிக்கவும் மறக்கக் கூடாது.
இப்படிப்பட்ட நேர்மறை மற்றும் நெறிமுறை சூழலை வளர்ப்பதன் மூலம், உங்கள் காலத்திற்குப் பின்பும் (அடுத்த தலைமுறைக்கான) ஒரு நல்ல தலைவரை உருவாக்க முடியும்.