ஸ்பெஷல்

இந்திய தொலைத்தொடர்பு துறை: ஜெஃப் பெசோஸ் மற்றும் எலான் மஸ்க் நிறுவனங்கள் வருகை!

கல்கி

இந்தியாவின் பிராட்பேண்ட் தொலைத்திடர்பு சேவையில் அமெரிக்காவின் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ஆகியோர் களமிறங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய தொலைத்தொடர்பு துறையில் ரிலையன்ஸ் ஜியோவை தவிர்த்து மற்ற நிறுவனங்கள் பெரும் நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. இருப்பினும் ஏராளமான சந்தை வாய்ப்புகள் குவிந்து கிடப்பதால் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ஆகியோர் இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் இந்தியாவில்
அதிவேக பிராட்பேண்ட் சேவைகளை வழங்க இந்த இரு நிறுவனங்களும் மத்திய அரசுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளீயாகியுள்ளது. இதில் எலான் மஸ்க் தனது ஸ்டார்லிங் சேட்டிலைட் இணைய சேவை நிறுவனத்தின் மூலம் இந்தியாவில் சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளார்.

இதன் மூலம் DTH போல வீட்டின் மேற்கூரையில் ஆண்டனாவை பொருத்தி சேட்டிலைட் மூலம் நேரடியாக இணைய சேவையை பெறலாம். இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஸ்டார்லிங் நிறுவனத்தின் இந்திய நிர்வாக இயக்குனராக Paypal நிறுவன அணியில் ஒருவராக இருந்த சஞ்சீவ் பார்கவா நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். அமேசான் மற்றும் ஸ்டார்லிங் ஆகிய நிறுவனங்களும் லைசன்ஸ் கோரி விரைவில் விண்ணப்பிக்கும் என்று மத்திய அரசு எதிர்பார்ப்பதாக்க கூறப்படுகிறது.

ஆண்களை விட பெண்கள் ஏன் அதிகம் பேசுகிறார்கள் தெரியுமா?

ஒவ்வொன்றும் ஒரு ரகம்; தள்ளிப்போடுபவர்கள் மொத்தம் 5 ரகம்!

தமிழ் சினிமாவில் மாறாத விஷயங்கள் என எழுத்தாளர் சுஜாதா சொன்ன 20 சுவாரஸ்யமான விஷயங்கள்!

Male Heart Attack: ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான 7 காரணங்கள்! 

சிரஞ்சீவியாக உலகில் வாழும் ஏழு பேர் யார் தெரியுமா?

SCROLL FOR NEXT