ஸ்பெஷல்

இந்திய விமானப்படை: புதிய தளபதி வி.ஆர்.சவுதாரி பதவியேற்பு!

கல்கி

டெல்லியில் இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக விவேக் ராம் சவுதாரியா பதவியேற்றுக்கொண்டார்.

இந்திய விமானப்படை தளபதியாக இருந்த ஆர்.கே.எஸ்.பதவுரியா இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில், துணைத் தளபதியான வி.ஆர்.சவுதாரியா புதிய தளபதியாக கடந்த 25-ம் தேதி நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக விவேக் ராம் சவுதாரியா பதவியேற்றுக் கொண்டார்.

கடந்த 1982-ம் ஆண்டு டிசம்பரில் இந்திய விமானப் படையில் போர் விமானியாக சேர்ந்த சவுதாரியா, இந்திய விமானப்படையில் மிக்-21, மிக்-23 எம்எப், மிக் 29, சுகோய் 30 எம்கேஐ உள்ளிட்ட பல்வேறு போர் விமானங்களை இயக்கியவர். மேலும் 3,800 மணி நேரத்துக்கு மேல் விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடப்படுகிறது. மேலும், இந்திய விமானப் படையின் துணைத் தளபதியாக ஏர் மார்ஷல் சந்தீப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

80 அடி உயர சிவபெருமான் சிலை எங்குள்ளது தெரியுமா?

ஆண்களை விட பெண்கள் ஏன் அதிகம் பேசுகிறார்கள் தெரியுமா?

ஒவ்வொன்றும் ஒரு ரகம்; தள்ளிப்போடுபவர்கள் மொத்தம் 5 ரகம்!

தமிழ் சினிமாவில் மாறாத விஷயங்கள் என எழுத்தாளர் சுஜாதா சொன்ன 20 சுவாரஸ்யமான விஷயங்கள்!

Male Heart Attack: ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான 7 காரணங்கள்! 

SCROLL FOR NEXT