விளையாட்டு

கவனக் குறைவு. பாதிப்பு குழந்தைகளுக்கே!

மங்கையர் மலர்

சியாமளா வெந்நீர் நிறைந்த பாத்திரத்தை சமையலறையிலிருந்து எடுத்துக்கொண்டு குளியலறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள். யாரோ கதவை தட்ட கொதிக்கும் தண்ணீர் நிறைந்த பாத்திரத்தை கட்டிலுக்குப் பக்கத்திலிருந்த மேஜை மேல் வைத்துவிட்டு கதவைத் திறக்கச் சென்றுவிட்டாள். மேஜைக்குப் பக்கத்திலிருந்த கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த அவளின் ஒன்பது மாதக் குழந்தை திடீரென்று ஏன் எழுந்து கொண்டதோ தெரியவில்லை. கொதிக்கும் வெந்நீரை இழுத்து தன் மேல் கொட்டிக்கொண்டது.

கொதிக்கும் தண்ணீர் சூடான டீ மற்றும் சூடான குழம்புகளை குழந்தைகள் இழுத்து மேலே கொட்டிக் கொள்வது சர்வ சாதாரணமாக நடக்கிறது. என் நெருங்கிய சிநேகிதியின் குழந்தை கீழே இறக்கி வைத்திருந்த சூடான குக்கரில் கையை வைத்து விட்டு பட்டபாடு அந்த குழந்தைக்குத்தான் தெரியும். இயற்கையாகவே குழந்தைகளுக்கு எதையும் சட்டென்று இழுப்பதில் கொட்டிக் கவிழ்ப்பதில் ஆர்வம் அதிகம். அதிலும் சூடான தண்ணீரையோ குழம்பையோ மேல கொட்டிக் கொண்டால் வேதனை தாங்க முடியுமா? சூடான ஆவி பட்டாலே குழந்தைகளின் பூப் போன்ற சருமம் வாடி விடுமே. அப்பொழுது சூடான பதார்த்தங்களை வைக்கும்போது கைக் கெட்டாத தூரத்தில் வைப்பது நல்லது.

சூடான தண்ணீரையோ, குழம்பையோ குழந்தை மேலே கொட்டிக்கொண்டால் குழந்தையின் சட்டையைத்தான் முதலில் கழற்ற வேண்டும். ஏனென்றால்  சூட்டை உறிஞ்சிய சட்டை குழந்தையின் தோலைப் பாதித்துக் கொண்டே இருக்கும். அதற்காக முரட்டுத்தனமாக சட்டையைப் பிய்த்து எடுக்காதீர்கள். சட்டையைக் கழற்றியபின் சூடுபட்ட இடத்தில் குளிர்ந்த தண்ணீரை ஊற்றுங்கள். குழாயில் தண்ணீர் வரவில்லையே என்று கவலைப்பட வேண்டாம். வாளியில் அல்லது பாத்திரத்தில் உள்ள தண்ணீரை மொண்டு ஊற்றுங்கள். குறைந்தது பத்து நிமிடம் வரை தீப்பட்டாலும், தீப்பட்ட இடத்தில் ஐஸ் கட்டியை வையுங்கள். அல்லது குளிர்ந்த தண்ணீரை ஊற்றுங்கள். ஐஸ் கட்டி குளிர்ந்த தண்ணீர் இரண்டும் தோலின் திசுக்கள் பாதிக்கப்பட்டு சேதமடையாமல் தடுக்கின்றன.

டாக்டரிடம் காட்டும்வரை எந்த ஒரு கிரீமையோ அல்லது வீட்டு வைத்தியமாகவோ எதையுமே புண்பட்ட இடத்தில் தடவ வேண்டாம். ஒரு சின்னஞ்சிறு புண் பெரிய ‘இன்பெக்‌ஷனாக’ முடியும். டாக்டரிடம் போக நேரமாகும் என்றாலோ பக்கத்தில் டாக்டரே இல்லாத இடத்தில் வீடு இருக்கிறது என்றாலோ ‘ஆண்டிசெப்டிக்’ பவுடர் அல்லது கிரீமைத் தடவலாம். வீட்டிலேயே அயர்ன் பாக்ஸ் வைத்துத் தாங்களே துணிகளைத் தேய்த்துக்கொள்ளும் தாய்மார்கள் சூடான அயர்ன் பாக்ஸ் விஷயத்தில் மிகவும்  கவனமாக இருக்க வேண்டும். துணிகளைத் தேய்த்து விட்டுச் சூடான அயர்ன் பாக்ஸை அந்த இடத்தை விட்டு குழந்தைகளுக்கு எட்டாத தூரத்தில் வைத்துவிடுவது என்பதை மனத்தில் மந்திரம் போல் பதிய வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளிடத்தில் மிக்க கவனம் தேவை.

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT