உலக கோப்பை ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரில் ஆஸ்திரேலியா 8 போட்டிகளில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் மோசமான ஆட்டத்தால் தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி, எப்படி எழுச்சி பெற்றது என்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு வீரர்களின் தனிப்பட்ட திறமையும், ஆட்ட வீரர்களின் தேர்வும்தான் முக்கிய காரணம் என்று சொல்லலாம்.
ஆஸ்திரேலியா மூன்று ஆட்டங்களில் தென்னாப்பிரிக்காவிடமும், இரண்டு போட்டிகளில் இந்தியாவிடமும் தோல்வி அடைந்தது. தொடக்கம் முதலே ஆஸ்திரேலியாவுக்கு எதுவும் சரியாக நடக்கவில்லை.
டிராவிஸ் ஹெட் கையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக விளையாட முடியாமல் ஓய்வில் இருந்தார். மார்னஸ் லபுசாக்னேவுக்கு 18 பேர் கொண்ட அணியில் இடம் கொடுத்ததால் மற்றொரு சுழல்பந்து வீச்சாளர் அஷ்டன் அகர் அணியில் இடம்பெறவில்லை. மாக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் மூவரும் காயம் காரணமாக தங்களை முழுமையாக தயார்செய்துகொள்ள முடியவில்லை. மார்கஸ் ஸ்டோனிஸ்க்கு தொடையில் தசைப்பிடிப்பு பிரச்னை இருந்தது. ஆடம் ஜம்பாவும் காய்ச்சால் காரணமாக அவதிப்பட்டு வந்தார். கேமரூன் கிரீன் மற்றும் அலெக்ஸ் காரே இருவரும் ஃபார்மில் இல்லை. பாட் கம்மின்ஸ், உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக நடந்த இரண்டு ஒரு நாள் போட்டியின் போதுதான் கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்தார்.
சென்னையில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா 199 ரன்களுக்கு சுருண்டது. ஒரு கட்டத்தில் இந்தியா 20 ரன்களுக்கு 4 விக்கெட் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மிட்சல் மார்ஷ் விராட் கோலி அடித்த பந்தை கேட்ச் பிடிக்க தவறியதால் ஆட்டத்தின் போக்கு மாறி இறுதியில் இந்தியா வென்றது.
அடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் ஆஸ்திரேலியா தோல்விகண்டது. ஆஸ்திரேலியா 177 ரன்களில் ஆட்டமிழந்தது. எனினும் இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது. பந்துவீச்சாளர் ஜம்பா, கேப்டன் கம்மின்ஸ், வார்னர், மார்க் சிறப்பாக விளையாடி வெற்றிதேடித்தந்தனர். நெதர்லாந்துக்கு எதிரான போட்டியிலும் வார்னர் சிறப்பாக ஆடி சதம் அடித்தார். நியூஸிலாந்து எதிரான போட்டியில் 81 ரன்கள் குவித்து ஒருநாள் போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தினார்.
முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்த போதிலும் பின்னர் சுதாரித்துக் கொண்டது. டேவிட் வார்னர்- மார்ஷ் இருவரும் தங்களது திறமையை வெளிப்படுத்தி ஆடியதால் அடுத்தடுத்த ஆட்டங்களில் ஆஸ்திரேலியா வெற்றிபெற முடிந்தது.
பின்னர் ஒரு வழியாக டிராவிஸ் ஹெட் அணியில் இடம்பெற்றார். கேப்டன் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் மீது நம்பிக்கைவைத்து அவரை அணியில் சேர்த்தார். அதற்கு ஏற்றாற்போல் அவரும் நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் 59 பந்துகளில் சதம் அடித்து தமது திறமையை நிலைநாட்டினார்.
ஆப்கானிஸ்தானக்கு எதிரான போட்டியில் ஹெட் சரியாக விளையாடாவில்லை. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியிலும் அவர் குறைந்த ரன்னில் வெளியேறினார். ஆனால், மார்ஷ் 177 ரன்கள் குவித்து கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தார். ஆனால், அரையிறுதியில் டிராவிஸ் பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் சிறப்பாக பேட் செய்து அரை சதம் எடுத்தார்.
மாக்ஸ்வெல் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 40 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 128 பந்துகளில் 201 ரன்கள் எடுத்தார். 49 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற நிலையில் இருந்த ஆஸ்திரேலிய அணியை தனது சிறப்பான ஆட்டத்தால் அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார். பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க், தனது சிறப்பான ஆட்டத்தால் தென்னாப்பிரிக்காவுக்கு அதிர்ச்சித் தோல்வி தந்தார்.
ஆமதாபாதில் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி, பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் திறமையை வெளிப்படுத்து கோப்பையை கைப்பிடித்தது.
பேட்ஸ்மென்களின் தனிப்பட்ட திறமை, அணித் தேர்வு மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுதான் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி தேடித்தந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.