CSK clean bolt against Hyderabad's fine bowling
CSK clean bolt against Hyderabad's fine bowling 
விளையாட்டு

ஹைதராபாத் அணியின் நேர்த்தியான பந்து வீச்சில் சிஎஸ்கே க்ளீன் போல்ட்!

எம்.கோதண்டபாணி

பிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நேற்று இரவு நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை அணியை ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிஸ்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் நேற்று இரவு ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் எதிர்கொண்டன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் சென்னை அணியை பேட்டிங் செய்யப் பணித்தது.

சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் களம் இறங்கினர். அதிரடிக்கு பஞ்சமில்லாத ரச்சின் ரவீந்திரா 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். அதைத் தொடர்ந்து ஆட வந்த ரஹானே - ருதுராஜ் ஜோடி சற்று நேரம் களத்தில் நின்று விளையாடினர். 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில ருதுராஜ் அப்துல் சமதுவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து ரஹானேவும் 35 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து களம் இறங்கிய ஷிவம் துபே அதிரடியாக தனது ஆட்டத்தை தொடங்க, 24 பந்துகளை சந்தித்து 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். அதைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா – எம்.எஸ்.தோனி கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் நின்று விளையாடினர்.

20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் சேர்த்தது. மிகவும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் பந்து வீசிய ஹைதராபாத் அணி சார்பில் புவனேஸ்வர் குமார், நடராஜன், கம்மின்ஸ், ஷாபாஸ் அகமது, உனட்கட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கோடு ஹைதராபாத் அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாட வந்த அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் ஆட்டம் முதலே அதிரடியைக் காட்டி விளையாடினர். டிராவிஸ் ஹெட் 24 பந்துகளில் 31 ரன்களும், அபிஷேக் சர்மா 12 பந்துகளில் 37 ரன்களும் எடுத்து ஹைதராபாத் அணிக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.

அவர்களைத் தொடர்ந்து ஆட வந்த ஏடன் மக்ரம் மற்றும் ஷாபாஸ் அகமது ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை நிதானமாக உயர்த்தினர். ஏடன் மக்ரம் 36 பந்துகளில் ஒரு சிக்ஸ் மற்றும் 4 பவுண்டரிகளை விளாசி 50 ரன்களை சேர்த்து ஆவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து ஷாபாஸ் அகமது 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார்.

அதனையடுத்து ஆட வந்த கிளாசன் 10 ரன்களும் நிதிஷ் குமார் ரெட்டி 14 ரன்களும் எடுத்து 19வது ஓவரின் முதல் பந்தில் வெற்றிக்கான இலக்கைத் தொட்டனர். இதன் மூலம் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணியை வென்றது.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT