விளையாட்டு

ஜலதோஷமா? இதை செய்யுங்க உடனே பஞ்சா பறந்துவிடும்!

கல்கி டெஸ்க்

மார்கழி மாசம் போயாச்சு கடும் பனிக்காலம் போகவே இல்லையே … அடுத்து வீட்டில் ஒவ்வொருவராய் சளி, காய்ச்சல் என வந்து உடல் நிலையும் பாதித்து இம்சை பண்ணும். குளிர்கால தட்பவெப்பம் கிருமிகள் பெருக்கத்திற்கு ஏதுவான காலமென்பதால் விரைவில் நமது உடலில் புகுந்து நோய்களை உண்டாக்குகின்றன.

சளி பிடித்தால், நமது உடலிலுள்ள வெள்ளையணுக்களே அக்கிருமிகளுடன்சண்டையிடும். அவற்றை எதிர்த்து போரிட ஏதுவாக நமது மூலிகைகளைஅவற்றிற்கு தரும் போது வெள்ளையணுக்கள் பலம் பெற்று கிருமிகளைவெளியேற்றும். இது நடப்பதற்கு குறைந்தது 3 -5 நாட்களாகும்.

இப்படி இயற்கையாக நடக்கும் நிகழ்வுகளை நாம் மாத்திரைகள் கொண்டுதடுக்கும்போது, வெள்ளையணுக்கள் எதிர்த்து போரிடாமல் சோம்பேறியாகும். நமது உடல் எல்லாவ்ற்றிற்கும் மாத்திரைகளையே எதிர்பார்க்கும். ஆகவேமுடிந்தவரை மாத்திரைகளை தவிர்த்து இயற்கை வைத்தியங்களை முயற்சியுங்கள்.

வெற்றிலையில் மிளகு வைத்து மென்று சாறை விழுங்கலாம்.

கொய்யாப்பழத்தை மிளகுத் தூள் தொட்டு சாப்பிட, நுரையீரலில் உள்ள சளிவெளியேறி, இருமல் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும்.

ஆரஞ்சு ஜூஸில் தேன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால், சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.

ஒரு டம்ளர் அன்னாசிச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் அருந்தி வந்தால்உடல் சோர்வு மறையும் சளித்தொல்லை குணமாகும்.

வெங்காயத்தை தீயில் சுட்டு சாப்பிடுவதன் மூலம், இருமல் மற்றும் சளியில் இருந்துவிடுதலை கிடைக்கும்.

பசும் பாலை நன்கு கொதிக்க வைத்து, அதில் தேன் கலந்து குடிப்பதன் மூலமும்சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

கற்பூரவள்ளி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் குடிப்பதன்மூலமும் விரைவில் சளித் தொல்லை நீங்கும்.

வெற்றிலையை சாறு எடுத்து, தேன் கலந்து குடித்தாலும், இருமலில் இருந்துஉடனடி நிவாரணம் கிடைக்கும்.

டீத்தூளுடன் ஏலக்காய் பட்டை கிராம்பு சுக்கு மிளகு தட்டி சேர்த்து தண்ணீர்ஊற்றி கொதிக்கவைத்து பால் சேர்த்து குடித்தால் தொண்டைக்கு இதமாகஇருக்கும்.

ஜலதோஷம் காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்துஇடித்து பொடியாக்கி பனங்கல் கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.

நெல்லிக்காயில் கொட்டையை நீக்கி 1/2 லிட்டர் சாறு எடுத்து அதில் அளவு உப்புசேர்த்து 3 நாள் வெயிலில் காயவைத்து பின் தேங்காய் எண்ணெய்யை கொதிக்கவைத்து அதில் நெல்லி சாறு கலந்து கொதிக்க வைத்து கொண்டு மூக்கில் நுகரதலைவலி போகும்.

கரிசலாங்கன்னி, அரிசி, திப்பிலி பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட இறைப்புகுணமாகும்.

இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து சூடாக்கி தலையில் நெற்றியில் பற்று போடகுணமாகும்.

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறுதுண்டு சுக்கு 2 இலவங்கம் சேர்த்துமைபோல அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

ஒன்பது வாசல் கடந்து மூலவரை தரிசிக்கும் கோயில் எங்குள்ளது தெரியுமா?

சூரியகாந்தி விதையின் வியக்க வைக்கும் மருத்துவப் பலன்கள்!

Type 1 Diabetes: இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை! 

பலாக் கொட்டையின் வியக்க வைக்கும் அற்புதப் பலன்கள்!

ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்வதால் இவ்வளவு நன்மைகளா? 

SCROLL FOR NEXT