விளையாட்டு

நியூசிலாந்து எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் பந்து வீச்சு தேர்வு!

ஐசிசி உலககோப்பை 2023

பாரதி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும்ஐசிசி உலககோப்பையின் 16 வது போட்டியில் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று பந்து வீச்சை ஆப்கானிஸ்தான் அணி தேர்வுச் செய்துள்ளது.

நியூசிலாந்து இதுவரை நடந்த மூன்று போட்டிகளிலுமே வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. மூன்று போட்டிகளிலுமே துடுப்பாட்டத்தில் 250 ரன்கள் மேல் எடுத்து தொடர்ந்து துடுப்பாட்டத்தில் நல்ல ரன்கள் எடுத்து ஃபார்மிலேயே உள்ளது. இதுவரை நடந்த போட்டிகளில் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா, கான்வே, வில், லதம், கேன் வில்லியம்சன், மிட்செல் ஆகியோர் போட்டிபோட்டுக்கொண்டு சதம், அரை சதங்கள் அடித்துள்ளார்கள்.

அதேபோல் பந்துவீச்சிலும் ஹென்ரி, போல்ட், சாண்ட்னர், பிலிப்ஸ், தொடர்ந்து ஃபார்ம் இலக்காமல் விக்கெட்டுகளைக் கொடுத்தார்கள். கடந்த போட்டியில் கேன் காயமடைந்த நிலையில் இன்றைய போட்டியில் லதம் அணியை வழிநடத்துவார் என கருதப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் அணியை பொருத்தவரையில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியையே சந்தித்தது. ஆனால் அக்டோபர் 15ம் தேதி நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று. இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. ஆப்கானிஸ்தான் அணி முதல் போட்டியில் வெறும் 156 ரன்கள் மட்டுமே இலக்காக கொடுத்து. ஆனால் அடுத்த இரு போட்டிகளிலுமே 250 ரன்கள் மேல் எடுத்து தனது பேட்டிங்கில் முன்னேற்றம் அடைந்தது என்றே கூற வேண்டும்.

ஆப்கான் அணியில் குர்பாஸ், மெஹிதி, ஷாஹிதி, அஸ்மத்துல்லா,இக்ராம், ஆகியோர் பேட்டிங்கில் தொடர்ந்து நல்ல பெர்ஃபாமன்ஸ் கொடுத்து வருகிறார்கள். பவுலிங் பொருத்தவரை முஜீப், ஃபரூக், நபி, ரஷித் கான், நவீன் ஆகியோர் நன்றாக விளையாடி வருகின்றனர்.

நியூசிலாந்து அணியை பொருத்தவரை பேட்டிங் ,பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் வெறித்தனமாக விளையாடி வருகிறது. அதேபோல் ஆப்கானிஸ்தான் அணி சுழற்பந்துவீச்சில் யாராலும் எளிதாக எதிர்க்கொள்ள முடியாத அணியாக இருந்து வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச் பொருத்தவரையில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கே சாதகமாக இருக்கும் என்பதால் யார் பக்கம் வெற்றி இருக்கும் என்பது போட்டியின் முடிவில்தான் தெரியவரும்.

புள்ளிபட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள நியூசிலாந்து அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் முதல் இடத்தைப்பிடிக்கும். ஒருவேளை ஆறாவது இடத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்றால் இங்கிலாந்து அணியை பின்னுக்கு தள்ளி ஐந்தாம் இடத்தைப் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

SCROLL FOR NEXT