விளையாட்டு

ஐசிசி உலககோப்பை:2வது போட்டியில் பாகிஸ்தான் நெதர்லாந்து மோதல்!

பாரதி

சிசி உலககோப்பை இரண்டாவது நாள் போட்டியில் நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மோதலில் டாஸ் வென்றது நெதர்லாந்து.

13- வது ஐசிசி உலககோப்பை நேற்று அஹமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து இடையேயான முதல் போட்டி நடந்து முடிந்த நிலையில், இன்று ஹைத்ராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி ஆரம்பமாகியுள்ளது.

இதில் நெதர்லாந்து அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வுசெய்துள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற கடைசி ஐந்து, ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் இரண்டு போட்டிகளிலும் நெதர்லாந்து மூன்று போட்டிகளிலும் வென்றுள்ளது. இதுவரை பாகிஸ்தான் நெதர்லாந்து நேருக்கு நேர் மோதிக்கொண்ட ஆட்டத்தில் பாகிஸ்தான் ஆறு போட்டிகளை வென்றுள்ளது. இன்றைய போட்டிக்கான ஆட்டத்தில் 350 ரன்கள் எடுத்தால் வலுவான போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது.

ஹைத்ராபாத்தின் வெப்பநிலை 33 டிகிரி செல்ஷியஸ் உள்ளது இதனால், மழையால் போட்டிக்கு எந்த பாதிப்பும் இருக்காது என கூறப்படுகிறது. அதேபோல், ராஜீவ் காந்தி மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட்டின்படி பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். மேலும், சுழல் பந்து வீச்சு, மிடில் ஓவர்களுக்கும் சாதகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி உலக்கோப்பையின் இரண்டாவது போட்டியான இந்த போட்டியின் நடுவர்கள் ஏட்ரியன் ஓல்சுடொக், க்ரிஸ் ப்ரவுன் மற்றும் ராட் டக்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இன்றைய போட்டியை தொகுத்து வழங்கும் பொறுப்பு ஹைத்ராபாத் அணிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியை காண மொத்தம் 38 ஆயிரம் இருக்கைகள் கொண்ட ராஜீவ் காந்தி மைதானத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் குவிந்துவருகிறார்கள்.

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இதுவரை 108 போட்டிகளில் 5 ஆயிரத்தி 409 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல் நெதர்லாந்து கேப்டன் எட்வார்ட் 38 போட்டிகளில் ஆயிரத்தி 212 ரன்கள் எடுத்துள்ளார். இன்று நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் ஓப்பனராக களமிறங்குவார் என கருதப்படுகிறது. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆட்டத்தை காண ஏராளமான இந்திய ரசிகர்கள் ஆவலுடன் போட்டியை கண்டுகளித்துவருகிறார்கள்.

விண்வெளியில் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்க முடியுமா?

தொற்று நோய்களைப் புரிந்துகொள்வது எப்படி?

வரமிளகாய் வத்தக்குழம்பும், ஸ்பைசி தொண்டக்காய் வறுவலும்!

இது தெரிஞ்சா இனி நீங்க பிரட் சாப்பிடவே மாட்டீங்க! 

லடாக் பயண தொடர் 5 - ஐந்து நிமிடங்களுக்கு மேல் இங்கே நிற்க அனுமதி இல்லை... அப்படி நின்றால்...?

SCROLL FOR NEXT