நேற்று இந்திய ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான டி20 இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
நேற்றைய ஆட்டம் கடந்த நாட்கள் பெய்த மழையினால் ஆடுகளம் சேதமாகியிருந்தது. அதன் காரணமாக போட்டி தாமதமாக தொடங்கியதில் 20 ஓவர் 8 ஒவராக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி 8 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 90 ரன் எடுத்தது.
அதன் பின் களமிறங்கிய இந்தியா 7.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்து இந்தியா அபார வெற்றி பெற்றது. முன்னதாக ஆடிய தொடக்க ஆட்டகாரர்கள் சொற்ப ரன்களின் ஆட்டமிழக்க கேப்டன் ரோஹித் சர்மா நிதானமாக விளையாடி வெற்றிக்கு வித்திட்டார்.
கடைசி ஓவரில் ஏழு ரன்கள் தேவை என்ற நிலையில் தினேஷ்கார்த்திக் முதல் பந்தை சிக்சருக்கு பறக்கவிட வெற்றியை நெருங்கியது இந்திய அணி.
தினேஷ்கார்த்திக் அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்ட 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..
ஏற்கெனவே நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று முண்ணனியில் இருந்தது. இந்திய அணியின் இந்த வெற்றியின் மூலம் போட்டியை சமன் செய்துவிட்டது.
இதனால் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச்செல்ல இரு அணிகளும் கடுமையாக மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அடுத்தப் போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.