ஹாக்கி  
விளையாட்டு

சர்வதேச ஹாக்கி 'நேசன்ஸ்' கோப்பை; ஜப்பானை வென்றது இந்திய மகளிர் அணி!

கல்கி டெஸ்க்

ஸ்பெயினில் நடக்கும் ஹாக்கி 'நேசன்ஸ்' கோப்பை லீக் போட்டியில் இந்திய பெண்கள் அணி, 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி வெற்றிவாகை சூடியது.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஸ்பெயினில் பெண்களுக்கான ஹாக்கி 'நேசன்ஸ்' கோப்பை தொடர் நடத்தப்படுகிறது.  இதில் வெற்றிபெறும் அணி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள புரோ-ஹாக்கி தொடரில் இடம் பெற முடியும். அந்த வகையில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்த மொத்தம் 8 அணிகள் 2 பிரிவுகளாகப் பிரிகப்பட்டு லீக் முறையில் போட்டிகள் நடத்தப் படுகின்றன.

அந்த வகையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்திய பெண்கள் அணி 'பி' பிரிவில் ஜப்பான், சிலி, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுடன் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் முதல் சுற்று லீக் போட்டியில் சிலியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி, நேற்று 2-வது லீக் போட்டியில் ஜப்பானை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டி துவங்கிய 5 - வது நிமிடம் இந்தியாவின் சலிமா, முதல் கோல் அடித்தார்.  

பின் ஜப்பான் அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. அந்த வகையில் ஆட்டத்தின் முதல் பாதியில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. பின்னர் இப்போட்டியின் 40-வது நிமிடத்தில் இந்தியாவின் வீராங்கனை பியூட்டி டங்டங், ஒரு 'பீல்டு' கோல் அடித்து அசத்தினார். அதையடுத்து ஜப்பானின் டகாஷிமாருய் ஒரு கோல் அடித்தார்.

இப்போட்டியின்  முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வென்று வெற்றிவாகை சூடியது.  

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

ஐப்பசி அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு!

உன்னால் முடியும் பெண்ணே! இந்த 5 அடிப்படை விஷயங்கள் இருந்தால் போதுமே!

Dear Girls… உங்கள் தொப்பையை மறைக்க இப்படி ட்ரெஸ் பண்ணுங்களேன்!

SCROLL FOR NEXT