விளையாட்டு

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி!

கல்கி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, பாகிஸ்தான் த்ரில் வெற்றி பெற்றது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 27-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடைப்பெற்று வருகிறது.துபாயில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், ரோஹித் ஷர்மா களமிறங்கினார். இருவரும் இந்திய அணிக்கு அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர்.

இந்த ஜோடி 5.1 ஓவர்களில் 54 ரன்கள் சேர்த்தது.அதிரடியாக ஆடிய ரோஹித் 2 சிக்ஸர்,3 பவுண்டரிகள் எடுத்த நிலையில் 28 ரன்களில் அவுட் ஆனார். இதனையடுத்து விராட் கோலி களமிறங்கி 60 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது.

பின்னர் களம் இறங்கிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆசம் 14 ரன்களிலும், ஃபக்கார் சமான் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.பின்னர் தொடக்க ஆட்டக்காரர் ரிஸ்வான்  71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் 18-வது ஓவரின் 3-வது பந்தில் ஆசிப் அலி அடித்த பந்தை இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் பிடிக்க முயன்று தவற விட, இதுவே ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.

பாகிஸ்தான் கடைசி ஓவரில் 2 பந்துகளுக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 182 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது பாகிஸ்தான் வீரர் முகமது நவாசுக்கு வழங்கப்பட்டது.

சூப்பர் 4 சுற்றின் அடுத்த ஆட்டத்தில் இலங்கை அணியை இந்தியா நாளை எதிர் கொள்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!

World Family Doctor Day: கொண்டாடப்பட வேண்டிய ஹீரோக்கள்! 

பெண்களே! உங்கள் முகத்திற்கு ஏற்ற பொட்டு எது?

5 Cool experiments for young science lovers!

உண்டியலின்றி உயர்ந்து நிற்கும் பாலாஜி!

SCROLL FOR NEXT