விளையாட்டு

ஒடிசா உலகக் கோப்பை ஹாக்கியைக் காணச் சென்றஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

கல்கி டெஸ்க்

லக நாடுகள் பலவும் பங்கேற்கும் பதினைந்தாவது உலகக் கோப்பைஆண்கள் ஹாக்கி போட்டி ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலா ஆகிய இடங்களில் 13.01.2023 முதல் 29.01.2023 வரை நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகளைக் காணவும், அம்மாநிலத்தின் விளையாட்டு அரங்கங்களின் கட்டமைப்பு மற்றும் தரத்தை அறியவும் சிறப்பு விருந்தினராக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் ஒடிசா மாநிலம் சென்றுள்ளார்.

முன்னதாக, உலகக் கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டியைக் காண தங்கள் மாநிலத்துக்கு வருகை தருமாறு ஒடிசா அரசிடம் இருந்து வந்த அழைப்பை ஏற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடிசா மாநிலம் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அரசு முறைப் பயணமாக ஒடிசா சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அம்மாநில அரசு உற்சாகமான வரவேற்பு கொடுத்தது. அதைத் தொடர்ந்து, அமைச்சர் உதயநிதியை ஹாக்கி இந்தியா நிர்வாகி சேகர் மனோகரன், ஹாக்கி இந்தியா செயல் இயக்குநர் கமாண்டர் ஸ்ரீ வத்ஸா உள்ளிட்டோர் புவனேஸ்வர் விமான நிலையத்தில் வரவேற்றனர். ஒடிசா மாநிலத்தின் உணவுத் துறை அமைச்சர் அட்னு சபயாசச்சி நாயக், ஒடிசா மாநில வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் மதிவதனன் ஆகியோர் அமைச்சர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சிகளில் உடனிருந்து அவரை கவனித்துக் கொண்டனர்.

நேற்று புவனேஸ்வர் கலிங்கா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற கால்பந்து, ஹாக்கி, தடகள மைதானம், நீச்சல் குளம் மற்றும் துப்பாக்கி சுடும் அரங்கம் ஆகியவற்றை பார்வையிட்டு, அதன் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பயன்பாடு குறித்து அமைச்சர் உதயநிதி சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர், ஒடிசா மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் துஷார்கன்டி பெகரா மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்தப் பயணத்தினிடையே, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்துப் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்காக தங்களது மாநிலம் முன்னெடுத்துவரும் திட்டங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார்.

கொளுத்தும் வெயிலிலும் ஒரு நன்மை இருக்கிறது; எப்படி தெரியுமா?

அரிசோனா பாலைவனத்தில் பயிற்சி செய்யும் நாசா...  காரணம் தெரிஞ்சா ஆடிப் போயிடுவீங்க! 

IPL 2024: ருதுராஜிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்படலாம் – இர்பான் பதான் எச்சரிக்கை!

இதய மாற்று அறுவை சிகிச்சையில் ஒரு புதிய மைல்கல்!

பெண்களுக்கு கைமேல் பலன் தரும் கன்னிகா பரமேஸ்வரி வழிபாடு!

SCROLL FOR NEXT