விளையாட்டு

பற்பல நன்மைகள் தரும் பருப்புக் கீரை!

ஜெயகாந்தி மகாதேவன்

"பெண்களின் கீரை" என்றழைக்கப்படும் பருப்புக்கீரையில் வைட்டமின் A, B, C ஆகியவை அதிகளவிலும், நார்ச்சத்து, இரும்புச் சத்து, புரதம், பாஸ்பரஸ், தயாமின், நியாசின் போன்ற பிற சத்துக்களும், மீனில் இருந்து கிடைக்கக் கூடிய ஒமேகா 3 என்னும் ஆசிட்டும் அடங்கியுள்ளன.

பருப்புக் கீரையை கூட்டாகவோ மசியலாகவோ செய்து அடிக்கடி நம் உணவுடன் சேர்த்து உண்டு வர கிடைக்கும் நன்மைகள்:

பித்தம், தலை சுற்றல் குணமாகும்.

ஒமேகா 3 மூளையை சுறுசுறுப்பாக்குகிறது. இதயத்தை பலப்படுத்துகிறது.

சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், தக்காளி, பூண்டு ஆகியவற்றுடன் சேர்த்து சூப் செய்து சாப்பிட கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்து நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். உடல் எடை குறையும். ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு ரத்த அழுத்தம் சீராகும்.

ஜீரண மண்டலம் சீராக செயல்படும். வயிற்றில் அமிலம் அதிகளவில் சுரந்து நெஞ்செரிச்சல் ஏற்படுவதைத் தடுக்கும். மலச்சிக்கல் வராது. குடல் புழுக்கள் நீங்கும்.

பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகப்படுத்தும்.

இக்கீரை மசியலை நீராகாரத்துடன் சாப்பிட உடல் உஷ்ணம் குறைந்து, வெயிலினால் உண்டாகும் நீர்க்கடுப்பு, வேர்க்குரு, வேனல் கட்டிகள் ஆகியவை வராமல் தடுக்கலாம். வெயில் கால நோய்களாகிய அக்கி, அம்மை போன்றவை வரும்போது, அவற்றின் கொப்புளங்களின் மீது இந்தக் கீரையை தண்டுடன் அரைத்து மேல்ப் பூச்சாக தடவி வர நோய் விரைவில் குணமாகும்.

கல்லீரல் சிறப்பாக இயங்கும்.

தோல் பளபளப்பாகும். கண் பார்வைத் திறன் பாதுகாக்கப்படும். நகம் உடைதல், முடி கொட்டுதல் தடுக்கப்படும். உடல் வீக்கம், வாய்ப்புண், சிறுநீர் நன்கு பிரியாமை போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

பித்தப்பையில் கல் மற்றும் சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் இக்கீரை உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

உங்க பெண் குழந்தைக்கு இந்த உணவுகளைக் கட்டாயம் கொடுக்கவும்!  

SCROLL FOR NEXT