ராகுல் ட்ராவிட் மகன் சமித் ட்ராவிட் தீடிரென்று இந்திய U19 அணியில் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
கிரிக்கெட்டில் பல முன்னாள் முன்னணி கிரிக்கெட் வீரர்களின் வாரிசுகள் கிரிக்கெட்டில் நுழைவது வழக்கம்தான். கவாஸ்கர் மகனான ரோகன் கவாஸ்கர் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். அதேபோல், சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இந்திய அணியில் சேர வேண்டும் என்று கடுமையாக முயற்சித்து வருகிறார். இவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். இந்தநிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட்டின் மகன் சமித் ட்ராவிட் அண்டர் 19 அணியில் இடம்பெற்றார்.
அதாவது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகளில் இடம்பெற்றார். அடுத்த அண்டர் 19 உலக கோப்பை தொடர் விளையாடும்போது சமித் டிராவிட்டுக்கு 20 வயது ஆகிவிடும் என்பதால் அவரால் உலகக் கோப்பையில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அண்டர் 19 தொடரிலாவது இடம்பெறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இதிலும் அவர் இடம்பெறவில்லை.
சமித் டிராவிட் இந்திய 19 அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் மாற்றப்பட்டு ரோகித் ராஜாவாத் என்ற வீரருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்பது இப்போது தெரியவந்துள்ளது.
ஆனால், சமித் ஏன் அணியிலிருந்து நீக்கப்பட்டார் என்ற விஷயம் இன்னும் தெரியவரவில்லை. சமீபத்தில் மகாராஜா டி20 தொடரில் சமித் பங்கேற்றார். ஏழு இன்னிங்ஸில் விளையாடிய அவர் வெறும் 33 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
ஒருவேளை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று அணியிலிருந்து நீக்கப்பட்டாரா? அல்லது இதன்பின்னால் ஏதேனும் அரசியல் இருக்கிறதா என்று எதுவும் தெரியவரவில்லை.
சமித் ட்ராவிட்டிற்கு பந்து வீசவும் தெரியும். ஆனால், மகாராஜா தொடரில் அவருக்கு பந்துவீசும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பின. ஒருவேளை சமிதுக்கு காயம் எதுவும் ஏற்பட்டிருக்கலாம், அதனால்தான் அணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள். சமித் அணியிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.