சச்சின் 
விளையாட்டு

2024ல் தொடக்கத்தில் 23 விக்கெட்டுகள்...சச்சின் போட்ட அதிர்ச்சி ட்வீட்!

பாரதி

தென்னாப்பிரிக்காவும் இந்தியாவும் டெஸ்ட் போட்டியில் விளையாடு வருகிறது. டிசம்பர் 26 முதல் 28 வரை நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன் இரண்டாவது போட்டி நேற்று தொடங்கி 7ம் தேதி முடிவடைகிறது. இந்த போட்டியில் நிச்சயம் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர். அதேபோல் ஆட்டத்தின் தொடக்கம் நன்றாகத்தான் சென்றது.

இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் முதலில் தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்தது. அப்போது இந்திய அணியிலிருந்து பந்து வீசிய சிராஜ் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் வெரும் 55 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ரசிகர்களின் மகிழ்ச்சி அளவுக்கடந்து சென்றது. அதனால் இந்திய அணி ஏறத்தாழ 250 ரன்கள் எடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் இழப்பில் 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால் அடுத்த 11 பந்துகளில் இந்திய அணி தொடர்ந்து 6 விக்கெட்டுகளை இழந்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்தது. முதல் நாளே தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பில் 62 ரன்களை எடுத்தது.

இது ரசிகர்களை மட்டுமல்ல முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சினையும் ஆச்சரியத்தில் தள்ளியது. இது குறித்து தனது X தளத்தில் பதிவிட்ட சச்சின், “ இந்த ஆண்டின் முதல் போட்டியில் ஒரே நாளில் 23 விக்கெட்டுகள் எடுத்தது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. சிறிதும் நம்ப முடியவில்லை. தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழக்கும்போது விமானம் பயணம் மேற்கொண்டேன். வீட்டுக்கு வந்து பார்த்தால் மீண்டும் தென்னாப்பிரிக்கா அணியே மூன்று விக்கெட்டுகளை இழந்ததாக காண்பிக்கிறது. அப்படி என்னத்தான் நான் மிஸ் செய்தேன்” என்று பதிவிட்டிருந்தார்.

ஒரு ரன் கூட எடுக்காமல் 6 விக்கெட்டுகளை எடுத்தது சச்சினாலேயே ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. எப்போதும் இந்திய அணி தோல்வி அடைந்தால் ஆறுதல் சொல்லும் சச்சின், இப்போது என்ன மிஸ் செய்தேன் என்று மறைமுகமாக இந்திய அணியை விமர்சித்திருக்கிறார.

குளிருக்கு இதமாக, ப்ரோட்டீன் நிறைந்த பச்சைப் பட்டாணி-பசலைக் கீரை சூப் செய்யலாமா?

சைபர் கிரைம்: திரைக்குப் பின் அதிகரிக்கும் குற்றங்கள்; சிக்கித் தவிக்கும் மக்கள்! தப்பிக்க என்ன வழி?

தெய்வீக மாதமான கார்த்திகையின் 12 சிறப்புகள்!

குடும்ப வாழ்விற்கு சகிப்புத்தன்மை இன்றியமையாதது!

யாரெல்லாம் பற்களுக்கு க்ளிப் பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

SCROLL FOR NEXT