விளையாட்டு

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் : தொடரிலிருந்து விலகிய பும்ரா எப்போது அணிக்கு திரும்புவார்? வெளியான தகவல்!

மணிகண்டன்

இந்திய பந்துவீச்சாளர்களில் முக்கிய புள்ளியாக கருதப்படுபவர் பும்ரா. யார்க்கர் பந்து வீசும் திறமை, டெத் ஓவர்களை கையாளும் விதம் என தனக்கென தனி அடையாளத்தை உடையவர்.

இந்நிலையில் சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் போது அவர் சந்தித்த காயத்தின் காரணமாக அப்போட்டியின் போது விலகியதோடு மட்டுமல்லாமல், டி20 உலகக்கோப்பை தொடரிலும் அவர் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் மனம் உடைந்து போயினர்.

இந்நிலையில், தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மா இதுகுறித்து கூறுகையில், டி20 உலகக்கோப்பை போட்டியில் பும்ரா பங்குபெற வேண்டும் என்பதற்காக அவரை அவசரப்படுத்தினோம். அதன்படி அவர் உடல்நிலை தேறியவுடனே ஆஸ்திரேலியாவுக்கெதிரான டி20 தொடரில் சேர்த்தோம்.

இதனால் என்ன நடந்தது என்பதும் உங்களுக்கே தெரியும். அதனால் அவர் டி20 உலகக்கோப்பை போட்டியில் பங்கெடுக்க முடியாமலும் போனது. இந்நிலையில், அவரது உடல்நலன் கருதி பொறுமையாக செயல்பட வேண்டும் என்று உணர்ந்ததால்தான் நியூசிலாந்து, வங்கதேச அணிகளுக்கிடையேயான தொடரிலும் நாங்கள் அவரை பரிசீலிக்கவில்லை.

அதேசமயம், வருகின்ற ஜனவரி மாதம் 4 டெஸ்ட் கொண்ட ஆஸ்திரேலியாவுக்கெதிரான போட்டியில் பும்ரா இடம்பெறுவார் எனவும், அதற்குள் நல்லபடியாக உடல்நலன் தேறி மீண்டும் தனது பழைய பார்முக்கு திரும்புவார் என நம்புவதாகவும் சேட்டன் சர்மா தெரிவித்துள்ளார்.

முருகப்பெருமானின் அர்த்தமுள்ள திருநாமக் காரணங்கள்!

லெமன் கிராஸின் 11 ஆரோக்கிய நன்மைகள்!

கேன்சரை தடுக்கும் 7 வகை வெஜிடேரியன் உணவுகள் தெரியுமா?

வெப்பம் வாட்டி வதைக்குதா? இந்த தேங்காய்ப்பால் ஐஸ்கிரீம் ட்ரை பண்ணி பாருங்களேன்! 

வேதங்கள் வழிபட்ட சிவபெருமான் எங்கு வீற்றிருக்கிறார் தெரியுமா?

SCROLL FOR NEXT